TN Headlines: வங்கக்கடலில் உருவாகும் புயல்; அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் - முக்கிய செய்திகள்
தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- Path Of Cyclone: மக்களே! வங்கக்கடலில் உருவாகும் புயல்.. பயணிக்கப்போகும் பாதை என்ன?
வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று காலை 5 மணி அளவில் சென்னைக்கு தென்கிழக்கு சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். பின்னர் 3 ஆம் தேதி வங்கக்கடலில் புயலாக வலுப்பெறக்கூடும். நேற்றைய தினம் புயல் வட தமிழகத்தை நோக்கி வரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று அந்த புயல் எந்த பகுதியில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- TN Governor Case: ”ஆளுநர் ரவி முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமர்ந்து பேச வேண்டும்” - தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி
இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா தலைமையிலான அமர்வு மனுவை விசாரித்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டாக்டர்.அபிஷேக் மனு சிங்வி, இந்த விவகாரத்தில் புதிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறினார். நவம்பர் 28 அன்று, ஆளுநர் மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். இது அரசியலமைப்பிற்கு எதிரானது” என்றார். மேலும் படிக்க
- CM MK Stalin Meeting: சென்னைக்கு செக் வைக்கும் மிக்ஜாம் புயல்! அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மழை பாதிப்புகள் மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் பெய்த கனமழை மற்றும் நாளை மற்றும் நாளை மறுதினம் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார். மேலும் படிக்க
- Free Breakfast Scheme: முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் தனியாருக்கு மாற்றப்படுகிறதா?- சென்னை மாநகராட்சி விளக்கம்
சென்னை மாநகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அட்சயப் பாத்திரம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு மாநகராட்சியோ, அரசோ அந்த நிறுவனத்திற்கு நேரடியாக எந்த நிதியும் வழங்கவில்லை. அதேநேரத்தில் ஆளுநர் மாளிகை மூலமாக ரூ.5 கோடி வழங்கப்பட்டது. அதேபோல வெங்காயம், பூண்டு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் சேர்க்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் படிக்க
- Rs2000 Currency RBI: கையில் இன்னும் ரூ.2000 நோட்டு உள்ளதா? ஆர்.பி.ஐ. உங்களுக்கு வழங்கும் அற்புத வாய்ப்பு!
கடந்த மே 19 அன்று சுத்தமான கள்ள நோட்டுகளை ஒழிக்கும் முயற்சியாக ரூ.2,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி, புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 97.26 சதவிகிதம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தற்போது தெரிவித்துள்ளது. அதன்படி, மே 19, 2023 நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடி. நவம்பர் 30, 2023 நிலவரப்படி இந்த மதிப்பு ரூ.9,760 கோடியாகக் குறைந்துள்ளது. மேலும் படிக்க