TN Headlines: 5 நாட்களுக்கு வெளுக்க போகும் மழை; டெங்கு எச்சரிக்கை விடுக்கும் அரசு: இதுவரை இன்று
TN Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
TN Rain Alert: அடுத்த 5 நாட்கள் கவனமாக இருங்க.. தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா?
கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இப்படியான நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Dengu Fever: டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனை செல்லுங்கள் - பொது சுகாதாரத்துறை இயக்குனர்
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளது.
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குற்றாலம் அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வெள்ள பெருக்கில் அஸ்வின் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப்பேரன் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
மலைபோல் குவியும் மருத்துவக்கழிவுகள்; விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அவலம்..நோய் பரவும் அபாயம்
விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த மருத்துவமனைக்கு ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் மருத்துவமனை வளாகத்தில் அன்றாடம் பயன்படுத்தப்படும் மருத்துவக் கழிவுகள் திறந்த வெளியிலேயே கொட்டி மலைபோல குவிந்து கிடக்கின்றது. குழந்தைகள் பிரிவு மருத்துவமனை வளாகத்திற்கு அருகில் இப்படி கழிவுகள் மலை போல குவிந்து கொட்டிக் கிடப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர்.
Mettur Dam: அதிரடியாக குறையும் மேட்டூர் அணையின் நீர்வரத்து - இன்று நீர் நிலவரம் இதுதான்.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,120 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 691 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 390 கன அடியாக குறைந்துள்ளது.
தமிழகத்தில் அதிகரிக்கும் மழை: ஆர்.பி உதயகுமார் வைக்கும் முக்கிய கோரிக்கை!
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது..,” மதுரை மாவட்டம் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. கடைசி இரண்டு வாரம் கத்திரி வெயில் பொதுமக்கள் பகல் நேரத்திலும், வெளியே நடமாட முடியாத நிலையும், இரவில் கடும் புழுக்கமும், பகலில் வெயிலில் கொடுமையாலும் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெயில் பாதிப்பால் பொதுமக்களுக்கு ஹிட் ஸ்டோக் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன இதனால் சிலர் உயிரிழக்கவும் நேரிட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மழைநீர் சாலைகளில் தேங்காமல் இருக்கவும் ,தேங்கிய மழை நீரை உடனடியாக அகற்றிடவும், தடையில்லாத, சிரமமில்லாத, பாதுகாப்பான போக்குவரத்திற்கும் தேவையான நடவடிக்கு எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என கடிதத்தில் கூறியுள்ளார்.