TN Headlines: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! விழுப்புரத்தில் வேங்கைவயல் சம்பவமா? ஒரு ரவுண்ட் அப்!
TN Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
TN Weather Update: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! மற்ற மாவட்டங்களில் என்ன நிலை? வானிலை நிலவரம்
தமிழ்நாட்டில் இன்று தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 3 மாவட்டங்களில் 12 முதல் 20 செ.மீ மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. இது போக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு: விடுதி வார்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி வளாகத்தில் அன்பு இல்லம் என்ற பெயரில் மாணவர்கள் தங்கும் விடுதி இயங்கி வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியின் காப்பாளராக சேத்துப்பட்டு தாலுகா தச்சம்பாடி கிராமத்தைச் சேர்ந்த அய்யாதுரை மகன் வீரபாண்டியன் வயது (36) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் படிக்க..
குடிநீர் கிணற்றில் மனித மலம் கலப்பா? - ஆய்வில் சிக்கியது என்ன? - விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே உள்ள கே.ஆர்.பாளையம் கிராமத்தில் குடிநீர் பயன்பாட்டிற்காக திறந்தவெளி கிணற்றில் உள்ள தண்ணீரை மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு, அதன்பிறகு குழாய்கள் மூலம் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க
TN TRB Recruitment 2024: விண்ணப்பிக்க இன்றே கடைசி: 4 ஆயிரம் பணியிடங்கள் பற்றி டிஆர்பி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4000 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 15.05.2024 மாலை 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
Savukku Shankar : பெண் காவலர்களை இழிவாக பேசிய சங்கர்? பெண் காவலர்களை வைத்தே சவுக்கை சுழற்றும் காவல்துறை!
பிரபல யூடிபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை இழிவாக பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் முதலில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டர். பின்னர், திருச்சி மாவட்ட காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சவுக்கு சங்கர் மீது தொடர்ச்சியாக வழக்கு பதியப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மேலும் படிக்க..