TN Headlines: கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள்: நலம் தேறிய கோவை யானை: இதுவரை இன்று
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
HBD Kalaignar Karunanidhi: தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத தலைப்புச் செய்தி.. பேனாவால் காத்த கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்.
Kalaignar Karunanidhi: மூச்சுள்ளவரை தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத தலைப்புச் செய்தியாக இருந்த, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள பல்வேறு தலைவர்களும். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
நலமே சூழ்ந்தது.. வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட காட்டு யானை : குட்டியுடன் சேர்த்து வைக்க முயற்சி..
கோவை மாவட்டம்: நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய பெண் யானை நலமுடனும், சுறுசுறுப்பாகவும் இருந்ததோடு, நன்றாக உணவருந்தி வந்தது. இதனால் இன்று காலை கிரேனில் இருந்து அந்த பெண் யானையை வனத்துறையினர் விடுவித்தனர். பின்னர் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதோடு, குட்டி யானையுடன் அந்த யானையை சேர்த்து வைக்கவும் வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை வனத்துறையினரின் சிகிச்சையால், மீண்டும் நலமுடன் வனப்பகுதிக்குள் சென்றது வன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
TN Weather Update: இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Salem Leopard: சேலத்தில் சிறுத்தை நடமாட்டம்..? - தனியாக செல்ல வேண்டாம்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கடந்த 2 நாட்களாக எலத்தூர், ராமசாமிமலை, குண்டுக்கல் ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக, மக்கள் தெரிவித்து வந்தனர். அங்குள்ள நாயையும், ஆட்டையும் சிறுத்தை கடித்து சாப்பிட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, சக்கரை செட்டிப்பட்டி கிராமத்தில் பட்டிக்குள் புகுந்து 6 ஆடுகளை அடித்து சாப்பிட்டது. இந்நிலையில், 6 மாதத்திற்கு பிறகு, தற்போது மீண்டும் காருவள்ளி ஊராட்சியில் உள்ள காருவள்ளி கரடு, கோம்பை கரடு பகுதிக்கு வந்த சிறுத்தை, வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் ஒரு மாட்டை அடித்து சாப்பிட்டுள்ளது. இந்நிலையில், காருவள்ளி கரடு பகுதியில் கேமரா பொருத்தப்பட்டு, வனத்துறையினர் 500 மீட்டருக்கு 2 பேர் என்ற விகிதத்தில், 20க்கும் மேற்பட்ட வன காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக கொடிக்கம்பத்தை பிடுங்க முயன்ற பெண்கள்.. காஞ்சியில் பாமக- திமுக மோதல்
DMK Vs PMK Fight ஒரு கட்டத்தில் அங்கிருந்த பெண்கள், திமுக கொடி கம்பத்தை தாங்களாகவே அகற்ற முயற்சி செய்தபொழுது உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது
Sarathkumar: தேர்தலில் மனைவி வெற்றிக்காக அங்கப்பிரதட்சணம் செய்த நடிகர் சரத்குமார்
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் நடிகர் சரத்குமார் விருதுநகர் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்து பிரார்த்தனை செய்தார்.