(Source: ECI/ABP News/ABP Majha)
TN Headlines: ”ஆன்லைனில் மது விற்பனை இல்லை” ; 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இதுவரை இன்று
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
TN Weather: அடுத்த 2 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர்,கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி, புதுச்சேரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது
Online Delivery: ஆன்லைன் மூலம் வீடுகளுக்கே நேரடியாக மது விற்கத் திட்டமா?- டாஸ்மாக் விளக்கம்
ஆன்லைன் மூலம் மதுவை விற்பது உள்ளிட்ட புதிய முயற்சிகளில் இறங்கும் திட்டம் எதுவுமில்லை என்று டாஸ்மாக் தெரிவித்துள்ளது. ஸ்விகி உள்ளிட்ட ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே மதுவைக் கொண்டு சென்று விற்கத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து டாஸ்மாக் விளக்கம் அளித்துள்ளது. அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை, ஆன்லைன் மூலம் மதுவை விற்பது உள்ளிட்ட புதிய முயற்சிகளில் இறங்கும் திட்டம் எதுவுமில்லை என்றும் டாஸ்மாக் தெரிவித்துள்ளது. டெட்ரா பாக்கெட் எனப்படும் காகிதக் குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்யுவும் திட்டமிடப்படவில்லை எனவும் டாஸ்மாக் தெரிவித்துள்ளது
தேசிய கல்விக்கொள்கை, நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு! மத்திய கல்வி அமைச்சருடன் ஆளுநர் பேசியது என்ன?
தேசிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு விவகாரங்களுக்கு இடையில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஆளுநர் ஆர்.என்.ரவி இடையிலான சந்திப்பு நிகழ்ந்துள்ளது. மேலும் படிக்க
Coimbatore to Abu Dhabi Flight: கோவையில் இருந்து அபுதாபிக்கு விமான சேவை துவக்கம் - தொழில் துறையினர் வரவேற்பு
கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு இண்டிகோ விமான சேவை ஆகஸ்ட் 10 ம் தேதி முதல் இயக்கப்பட இருக்கின்றது. இது கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்பட இருக்கும் 3 வது சர்வதேச விமானமாகும்.Coimbatore to Abu Dhabi Flight Service: பிற நாடுகளுக்கும் கோவையில் இருந்து விமானங்கள் இயக்க வேண்டுமென தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 01.07.2024 அன்று தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது பெறப்படுகின்றன.
https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Mettur Dam: அதிரடியாக உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்வரத்து - வினாடிக்கு 20,910 கன அடியாக அதிகரிப்பு
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து காணப்பட்டது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 4,047 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 5,054 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 20,910 கன அடியாக அதிகரித்துள்ளது.