மேலும் அறிய
Tamilnadu Roundup: உதயநிதி ஆய்வு, ஆனந்த், நிர்மல்குமாருக்கு ஜாமின் கிடைக்குமா?, ரூ.90,000-த்தை நெருங்கிய தங்கம் - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- சென்னை ராயப்பேட்டையில் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
- தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்க, இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கின்றனர் பாஜக நிர்வாகிகள்.
- அதிமுக, தவெக வரிசையில் தேர்தலை மனதில் வைத்து பாஜகவும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. எத்தனை பேர் களமிறங்கினாலும், திமுக கூட்டணியே வெல்லும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் முன்ஜாமின் கோரி புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை.
- உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸ் மற்றும் வைகோவை சந்தித்து நலம் விசாரித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.11,200-க்கும், ஒரு சவரன் ரூ.89,600-க்கும் விற்பனையாகிறது.
- சென்னை பாடிக்குப்பம் பகுதியில் நண்பர் வீட்டிற்கு சென்று மொட்டை மாடியில் போனில் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் இடி தாக்கி உயிரிழப்பு.
- தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
- வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் படத்திற்கு அரசன் என பெயரிடப்பட்டுள்ளது.
- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடிகர் யோகிபாபு மஞ்சள் ஆடை அணிந்து சாமி தரிசனம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















