மேலும் அறிய
Advertisement
Tamilnadu RoundUp: மத்திய குழு இன்று தமிழகத்தில் ஆய்வு முதல் விஜயை விமர்சித்த சேகர் பாபு வரை..
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை இன்றும், நாளையும் மத்திய குழு ஆய்வு செய்கிறது
- வங்கக் கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - 11,12ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
- கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தால் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்கவில்லை என விஜய் பேச்சு
- அழுத்தம் கொடுத்து இணங்கும் அளவிற்கு நான் பலவீனமானவன் இல்லை என திருமாவளவன் பதிலடி
- ”களத்திற்கே வராத தற்குறி தளபதி” விஜயை விமர்சித்த சேகர் பாபு
- புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சில் எனக்கு உடன்பாடில்லை - விளக்கம் கேட்டபின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்
- வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை
- 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 78 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை - சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
- விடுதலை 2 படத்தின் பின்னணி இசைப் பணிகள் நிறைவு - இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோர் இளையராஜாவை சந்தித்து நன்றி தெரிவிப்பு
- திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ₹75 லட்சம் பணத்தை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்
- “திமுக கூட்டணியில் பிரிவு வந்துவிடக் கூடாதா என பலரும் காத்திருக்கின்றனர்” - அமைச்சர் அன்பில் மகேஸ்
- 200 தொகுதிகளை அல்ல 234 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் - தவெக தலைவர் விஜய் கருத்துக்கு அமைச்சர் சேகர் பாபு பதில்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion