மேலும் அறிய

சென்னை - புதுச்சேரி பயணிகளுக்கு குட் நியூஸ்..! மகாபலிபுரம் - புதுச்சேரி பயணத்தில் புதிய அத்தியாயம்!

மகாபலிபுரம் முதல் புதுச்சேரி வரை 108 கி.மீ. தொலைவுக்கு ₹4,633.75 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கிழக்கு கடற்கரை சாலை 4 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

விழுப்புரம் : மகாபலிபுரம் - புதுச்சேரி இடையேயான கிழக்கு கடற்கரை சாலையை (இ.சி.ஆர்.) 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணியில், முதல் 2 கட்டங்களாக 62 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்று வரும் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மரக்காணம் - புதுச்சேரி அரியூர் இடையேயான 46 கிலோ மீட்டர் சாலை விரிவாக்கப் பணிகள் இன்னும் 3 மாதங்களில் தொடங்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

108 கிலோ மீட்டர் சாலை

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை 777 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிழக்கு கடற்கரை சாலை அமைந்துள்ளது. இதில் மகாபலிபுரத்தில் இருந்து புதுச்சேரி அரியூர் வரையிலான 108 கிலோ மீட்டர் தூர சாலையில் பல இடங்களில் வளைவுகள் உள்ளதாலும், இருவழிப் பாதையாக இருப்பதாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. மேலும், போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

இதையடுத்து, மகாபலிபுரம் முதல் புதுச்சேரி அரியூர் வரை 108 கிலோ மீட்டர் தூர சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.

இதற்காக மகாபலிபுரம் - முகையூர் இடையே 31 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.1,360.53 கோடியும், முகையூர் - மரக்காணம் இடையே 31 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.1,116.13 கோடியும், மரக்காணம் - புதுச்சேரி அரியூர் இடையே 46.05 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.2,157.09 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகாபலிபுரம் - முகையூர்

மகாபலிபுரம் - முகையூர் இடையேயான 31 கிலோ மீட்டர் சாலை விரிவாக்கப் பணி கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கியது. இந்தப் பகுதியில் 2 பெரிய மேம்பாலங்கள், 6 மேம்பாலங்கள், 8 சுரங்கப்பாதைகள், 69 பாக்ஸ் கல்வெர்ட்கள், 5 சிலாப் கல்வெர்ட்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.

நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், கட்டுமானப் பொருட்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் கூவத்தூர் அருகே ஒதியூர் கழிமுகப் பகுதியில் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவற்றால் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் பணிகளை முடிப்பதற்கான காலக்கெடு 2027-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஒரு பெரிய மேம்பாலம், 6 மேம்பாலங்கள், 8 சுரங்கப்பாதைகள், 65 பாக்ஸ் கல்வெர்ட்கள் மற்றும் 5 சிலாப் கல்வெர்ட்கள் பணிகள் முடிவடைந்துள்ளன. கடந்த மாத நிலவரப்படி இந்தப் பகுதியில் 76.95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

முகையூர் - மரக்காணம்

முகையூர் - மரக்காணம் இடையேயான 31 கிலோ மீட்டர் சாலை விரிவாக்கப் பணி கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 7-ந்தேதி தொடங்கப்பட்டது. இந்தப் பணியை 2025-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதிக்குள் முடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

இந்தப் பகுதியில் 3 பெரிய மேம்பாலங்கள், ஒரு மேம்பாலம், 11 சுரங்கப்பாதைகள் மற்றும் 63 பாக்ஸ் கல்வெர்ட்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.

நிலம் கையகப்படுத்துவதிலும், கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மண் கிடைப்பதிலும் ஏற்பட்ட தாமதத்தால் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் காலக்கெடு 2027-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 11 சுரங்கப்பாதைகளில் 9 பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. மற்ற மேம்பாலங்கள் மற்றும் பாலங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாத நிலவரப்படி 68.39 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

மரக்காணம் - அரியூர்

மரக்காணம் - புதுச்சேரி அரியூர் இடையே 46.05 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய புறவழிச்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. கூனிமேடு வழியாக புதுச்சேரி மாநிலம் அரியூரை இணைத்து, அங்கிருந்து விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் இந்தச் சாலை அமைக்கப்படுகிறது.

இந்தப் பகுதியில் 7 பெரிய மேம்பாலங்கள், 12 மேம்பாலங்கள் மற்றும் 123 பாக்ஸ் கல்வெர்ட்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளன. தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஒப்பந்த நிறுவனத்திடம் பணியாணை வழங்குவதற்கு முன்பு 80 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மீதமுள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகளை அடுத்த 3 மாதங்களுக்குள் முடித்து சாலை விரிவாக்கப் பணிகளை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பணிகள் தொடங்கிய நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இணைப்புச்சாலை பணிகள் தீவிரம்

மகாபலிபுரம் முதல் மரக்காணம் வரையிலான சாலை விரிவாக்கப் பணிகளில் நிலம் கையகப்படுத்தும் பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. நிலம் ஒப்படைக்கப்பட்ட இடங்களில் மேம்பாலங்கள் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மரக்காணம் புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு, இணைப்புச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தேன்பாக்கத்தில் மேம்பாலத்திற்கான கான்கிரீட் பணி முடிவடைந்து, ஒரு புறத்தில் இணைப்புச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. மறுபுறத்தில் பணி தொடங்கப்படாமல் உள்ளது.

வெண்ணாங்குப்பட்டில் மேம்பாலப் பணி முடிவடைந்தும், இணைப்புச்சாலை அமைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. விளம்பூரில் பெரிய மேம்பாலம் மற்றும் இணைப்புச்சாலை அமைக்கும் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

முதலியார்குப்பம் புறவழிச்சாலை தொடங்கும் இடத்தில் மேம்பாலப் பணி முடிவடைந்து, இணைப்புச்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. பரமகிரியில் மேம்பாலத்திற்கான கான்கிரீட் பணி முடிவடைந்த நிலையில், இணைப்புச்சாலை அமைப்பதற்காக பள்ளம் தோண்டி நிலத்தை சமன்படுத்தும் பணி நடந்து வருகிறது.

சிக்கணாங்குப்பம் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் மேம்பாலத்திற்கான ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு, இணைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முகையூர், கூவத்தூர் பகுதிகளில் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் கல்வெர்ட் பாலங்கள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. மேல்பெருமாள்சேரியில் சுரங்கப்பாதை பணி முடிவடைந்து, இணைப்புச்சாலைக்காக மண் கொட்டி சமன்படுத்தும் பணி நடைபெறுகிறது.

பயண நேரம் குறையும்

மகாபலிபுரம் - மரக்காணம் இடையேயான 62 கிலோ மீட்டர் தூர சாலை விரிவாக்கப் பணிகளை 2027-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

முழுமையாக 108 கிலோ மீட்டர் சாலையும் 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டால் சென்னை - புதுச்சேரி இடையேயான பயண நேரம் குறைவதுடன், போக்குவரத்து நெரிசலும் குறையும். மேலும், வாகனங்கள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் செல்ல முடியும்.

சாலை விரிவாக்கத்திற்கு இடையூறு

இதற்கிடையே, புதுச்சேரி - மரக்காணம் சாலையின் மையப்பகுதியில் கோட்டைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் அமைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சாலை விரிவாக்கப் பணி பாதிக்கப்பட்டு, வாகனங்கள் வளைந்து செல்லும் நிலை உள்ளது.

இதேபோல் கடப்பாக்கம் பகுதியிலும் நிலம் கையகப்படுத்தப்படாததால் சாலை விரிவாக்கப் பணி முழுமையடையாமல் உள்ளது. இதனால் வாகனங்கள் வளைந்து செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது.

மண் குவிப்பு

மரக்காணம் - அரியூர் சாலை விரிவாக்கப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள நிலையில், பணியாணை வழங்கப்படுவதற்கு முன்பே ஒப்பந்த நிறுவனம் பல்வேறு இடங்களில் கட்டுமானத்திற்குத் தேவையான மண்ணைக் குவித்து வருகிறது.

அரசு அனுமதி அளித்த அளவைவிட அதிகமாக மண் எடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனை புவியியல் மற்றும் சுரங்கத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

சாலையோர தடுப்புகள் தேவை

மகாபலிபுரம் - புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் பல இடங்களில் மாடுகள் கூட்டமாக சாலையின் குறுக்கே செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. குடியிருப்புப் பகுதிகளில் பொதுமக்களும் திடீரென சாலையைக் கடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே, விபத்துகளைத் தடுக்கும் வகையில் முக்கியமான இடங்களில் சாலையோர தடுப்புகள் அமைக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையைக் கடக்க உரிய வசதிகளை ஏற்படுத்தவும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய புகார்… அருள் விக்னேஷ் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் - நயினார் நாகேந்திரன் அதிரடி!
பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய புகார்… அருள் விக்னேஷ் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் - நயினார் நாகேந்திரன் அதிரடி!
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: திண்டிவனம் விசிக மாவட்ட செயலாளரின் மகன் கைது...!
சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: திண்டிவனம் விசிக மாவட்ட செயலாளரின் மகன் கைது...!
விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? 2000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எங்கே கிடைக்கும்?
விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? 2000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எங்கே கிடைக்கும்?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? 2000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எங்கே கிடைக்கும்?
விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? 2000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எங்கே கிடைக்கும்?
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம்.. குடை இல்லாமல் வெளியே போவாதீங்க.. இந்த 34 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!
Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம்.. குடை இல்லாமல் வெளியே போவாதீங்க.. இந்த 34 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!
நாட்டிலேயே கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு அதிகரித்தது எப்படி? அதிகாரிகளிடம் கேட்ட அமைச்சர்
நாட்டிலேயே கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு அதிகரித்தது எப்படி? அதிகாரிகளிடம் கேட்ட அமைச்சர்
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
EPS: காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
Thirupparankundram: ”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
TVK:
TVK: "ரீப்போஸ்ட் நிதியால் பதில் சொல்ல முடியுமா?" பாலியல் குற்றச்சாட்டில் தலைமறைவான திமுக நிர்வாகி - தவெக கேள்வி
Embed widget