Tamilnadu Roundup: தடையை மீறி தேமுதிக பேரணி! விஜயகாந்த் நினைவிடத்தில் குவியும் மக்கள் - 10 மணி செய்திகள்!
Tamilnadu Roundup 28th Dec 2024: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு போலீசாரின் தடையை மீறி தேமுதிக பிரம்மாண்ட பேரணி
விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்
விஜயகாந்த் நினைவிடத்தை முன்னிட்டு காலையிலே ஓ.பன்னீர்செல்வம், சீமான் நேரில் அஞ்சலி
விஜயகாந்த் நினைவிடத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தலைவர் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல்
இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழக அரசின் பட்டா இணையதளம் செயல்படாது
சேலம் மாவட்டத்தில் சாமந்திப்பூ விளைச்சல் அதிகரிப்பு; விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி
தேனி அருகே காரும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிதியுதவி
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்றும் உயர்நீதிமன்றம் விசாரணை
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நேரில் ஆளுநர் ஆய்வு
விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்
விஜயகாந்த் நினைவு நாளை முன்னிட்டு எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பிரபலங்கள் காலை முதலே அஞ்சலி செலுத்தி வருகின்றனர்