மேலும் அறிய
Advertisement
Tamilnadu Round Up: ஏழைகள் சுவாமி தரிசனம் செய்யக் கூடாதா? டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை? தமிழகத்தில் இதுவரை!
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
- அதிமுக எம்.எல்.ஏ. வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை இன்று அதிகாலை 1.30 மணிக்கு நிறைவு - முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் தகவல்
- திமுகவை எதிர்க்கிறோஎம் என்று ஒட்டுமொத்த திராவிடத்தையும் எதிர்ப்பது குதர்க்கமானது - திருமாவளவன்
- "ஆளுநரை வைத்து தமிழகத்தை துண்டாட நினைக்கிறது மத்திய அரசு" - காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை
- சிதம்பரம் கோயில் நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆவணங்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறநிலையத்துறை
- கோயில்களில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலித்தால் ஏழைகள் எப்படி தரிசனம் செய்வார்கள்? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
- விழுப்புரம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வாரச் சந்தையில் சுமார் ரூ.5 கோடிக்கு விற்பனையான ஆடுகள் - ஒரு ஆடு ரூ.3,000 முதல் ரூ.35,000 வரை விற்பனை
- கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பதிவாகியுள்ளது - அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 11 செ.மீ அளவுக்கும், தக்கலையில் 10 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது
- சென்னை அமைந்தகரையில் மாநகரப் பேருந்து நடத்துநர் ஜெகன் மூர்த்தி பேருந்தில் இருந்து கீழே தள்ளப்பட்டு உயிரிழந்த சம்பவம் - பேருந்தில் மதுபோதையில் பயணித்த கோவிந்தன் மீது கொலை உள்பட 3 பிரிவுகளில் வழக்கு
- சென்னை அண்ணாநகரில் ஆவின் லாரி, கலவை லாரி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - ஆவின் லாரி ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி, போலீசார் விசாரணை
- 'விஜய்யின் அரசியல் கட்சியால் நல்ல போட்டி இருக்கும்' நடிகை நமிதா பேட்டி
- மக்களவை தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம் - புதுச்சேரி மாநில பாஜக தலைவர் செல்வ கணபதி இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார்
- சிதம்பரத்தில் போலி மருத்துவர் ஊசி போட்டதால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்
- தீபாவளியையொட்டி 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஜோதிடம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion