Tamilnadu Roundup: உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. பள்ளிகளுக்கு விடுமுறை - 10 மணி வரை இதுதான்
Tamilnadu Rounudp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி 22ம் தேதி உருவாகிறது - வானிலை ஆய்வு மையம்
கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - புதுச்சேரி அரசு உத்தரவு
வேதாரண்யத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 16.34 செ.மீட்டர் மழைபதிவு - கோடியக்கரையிலும் கொட்டித் தீர்த்த மழை
பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகை- கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு
தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டை அருகே தொடர்ந்து மண் அரிப்பு - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சென்னை அருகே செம்மஞ்சேரியில் ரூபாய் 301 கோடியில் சர்வதேச விளையாட்டு நகரம்
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் விற்பனை
தவெக முக்கிய நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு
உபி அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் தமிழ்நாடு 455 ரன்கள் குவிப்பு





















