Tamilnadu Roundup: வெளுத்து வாங்கும் மழை.. சுற்றுலா தளங்களில் குவியும் பயணிகள் - தமிழ்நாட்டில் இதுவரை
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி61 ராக்கெட் 101 திட்டம் தோல்வி
கல்வி நிதியை விடுவிக்க மறுக்கும் மத்திய அரசு மீது வழக்கு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
புதிய கல்விக்கொள்கை மூலம் இந்துத்வா கொள்கையை திணிக்க முயற்சி - காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் குற்றச்சாட்டு
22ம் தேதி அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் - வானிலை மையம்
முடிவுக்கு வரப்போகும் கோடை விடுமுறை; சுற்றுலா தளங்களில் குவியும் பயணிகள்
இந்தியா - பாகிஸ்தான் மோதல்; பாகிஸ்தானுக்கு எதிரான பரப்புரைக்காக கனிமொழி தலைமையிலான குழு ஸ்பெயின், ரஷ்யா பயணம்
முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் 14 மணி நேரம் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு
டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு
இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மன்னிப்பு
கன்னியாகுமரியில் மேகமூட்டம் காரணமாக சூரிய உதயத்தை காண முடியாமல் பயணிகள் ஏமாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் திடீரென பெய் கனமழை; 15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை - சேலத்தில் கனமழையால் சாலைகளில் வெள்ளம்
கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வாணியம்பாடியில் கனமழை காரணமாக மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர் - நோயாளிகள் கடும் அவதி
கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணியாற்றி வந்த 13 வங்கதேச நபர்கள் கைது
சென்னை டைட்டல் பார்க் அருகே திடீரென சாலையில் விழுந்த பள்ளம் - 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டம் கைவிடப்பட்டதால் நடப்பு சாம்பியன் கொல்கத்தா தொடரில் இருந்து வெளியேறியது




















