Tamilnadu Roundup: அன்புமணி பதவி பறிப்பு.. சென்னை வரும் அமித்ஷா.. தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கினார் ராமதாஸ்
பாமக-வின் நிறுவனர் பதவியுடன் இனி தலைவர் பதவியையும் ராமதாசே சேர்த்து வகிக்க உள்ளார்
பாமக-வின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணிக்கு செயல் தலைவர் பதவி
தங்கம் விலை கடந்த 2 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்து 680 ரூபாய் அதிகரிப்பு - மக்கள கடும் அதிர்ச்சி
கோவையில் மாதவிடாய் என்பதால் பள்ளிக்கு வெளியே மாணவியை அமரவைத்து தேர்வு எழுத வைத்த கொடூரம்
கோவையில் பூப்பெய்த மாணவியை வெளியில் தேர்வு எழுத வைத்த பள்ளி மீது கடும் நடவடிக்கை தேவை - மக்கள் ஆவேசம்
நீலகிரி வெலிங்டன் ராணுவ கல்லூரியில் போர் நினைவு சதுக்கத்தில் மலர்வளையம் வைத்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மரியாதை
மத்திய உள்ளதுறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு சென்னை வருகை
சென்னை வரும் அமித்ஷா நாளை எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்திக்க திட்டம்
கோவையில் பாஸ்போர்ட் விசாரணைக்கு லஞ்சம் வாங்கிய காவலர் கைது
பாளையங்கோட்டை நீரேற்று நிலையத்தில் பணி நேரத்தின்போது சீட்டுக்கட்டு ஆடிய மாநகராட்சி ஊழியர்கள்
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே அரசுப்பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தெருநாய்கள் கடித்து 15 பேர் காயம் - கூண்டில் அடைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
ராணிப்பேட்டை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து அரசுப்பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
நிதி நிறுவன மோசடிகளில் சிக்கும் மக்கள்; போலீஸ் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை
சென்னை - கன்னியாகுமரி இடையே இன்று, 17ம் தேதி வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்
தூத்துக்குடியில் அஜித் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் கீதா ஜீவன்
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை சிஎஸ்கே - கொல்கத்தா அணி மோதல்





















