Tamilnadu Roundup 05.09.2025: பெரியார் படத்தை திறந்த முதலமைச்சர்.. செங்கோட்டையன் பேசப்போவது என்ன? தமிழகத்தில் இன்று
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த செய்திகளின் முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பெரியார் படத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒரு இனத்திற்கே சுயமரியாதையை ஊட்டியவர் பெரியார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியா? இன்று மனம் திறக்கும் செங்கோட்டையன்
தொடர் விடுமுறை எதிரொலி; சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்
தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்ததால் கிளாம்பாக்கம் அருகே போக்குவரத்து நெரிசல்
தமிழ்நாடு முழுவதும் 2500 பார்களை திமுக-வைச் சேர்ந்த ஒரே நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
மாணவர்களுக்கு அறம், அரசியல் என அனைத்தையும் கற்பித்தவர்கள் ஆசிரியர்கள் - ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நெல்லையில் அரசு பணத்தில் படித்துவிட்டு அரசு மருத்துவமனையில் பணியாற்றாத மருத்துவர்கள் தலைமறைவு
நெல்லை டவுன் காவல் நிலையத்தில் எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் சினிமா பாடல் பாடிய விவகாரம் - விளக்கம் அளித்த காவல்துறை
செங்கல்பட்டு அருகே மதுராந்தகம் அருகே லாரி மீது மோதிய கார் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
சென்னையில் கடந்த 8 மாதங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டிக்கெட் இன்றி பயணம் - 8 கோடி ரூபாய் வரை அபராதம் வசூல்
நாளை மறுநாள் 9.57க்கு தொடங்கி முழு சந்திர கிரகணம் - 1.30 நிமிடங்கள் வெறும் கண்களால் பார்க்கலாம்.





















