குறையும் கொரொனா... தமிழ்நாட்டில் இன்று முழு நிலவரம் என்ன?
தமிழ்நாட்டில் இன்று 8 ஆயிரத்து 183 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
தமிழ்நாடு முழுவதும் நேற்று 8 ஆயிரத்து 633 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இன்று 8 ஆயிரத்த 183 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு புதியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 14 ஆயிரத்து 680 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் கொரோனா தொற்றால் இதுவரை 5 லட்சத்து 28 ஆயிரத்து 768 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 468 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 7 ஆயிரத்து 715 நபர்களுக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தின் தலைநகரான சென்னையில் இன்றைய நிலவரப்படி, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 260ஆக பதிவாகியுள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் ஆண்கள் மட்டும் 14 லட்சத்து 12 ஆயிரத்து 721 ஆகும். பெண்கள் மட்டும் 10 லட்சத்து ஆயிரத்து 921 ஆக பதிவாகியுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்கள் மட்டும் 38 ஆகும்.
இன்று பாதிக்கப்பட்டவர்களில் தொற்று உறுதியானவர்கள் மட்டும் ஆண்கள் மட்டும் 4 ஆயிரத்து 620 ஆகும், பெண்கள் மட்டும 3 ஆயிரத்து 563 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 232 ஆகும். இதனால், குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 4 ஆயிரத்து 885 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 180 பேர் உயிரிழந்துள்ளனர்., தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்கு கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200க்கு கீழ் குறைந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 70 நபர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 110 நபர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள்.
மேலும் படிக்க : ஆழ்கடலுக்குள் என்ன இருக்கு? கண்டுபிடிக்க ஆய்வு வாகனம் - ரூ.4,000 கோடி திட்டத்தில் ISRO
இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 31 ஆயிரத்து 15 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக 8 ஆயிரத்து 32 நபர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு நாளை மறுநாளுடன் நிறைவு பெற உள்ளதால், புதிய தளர்வுகள் குறித்து நாளை அறிவிப்பு வெளியாக உள்ளது.
இந்த அறிவிப்பில் கொரோனா தினசரி பாதிப்பு கணக்கின் அடிப்படையிலே புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானா மாநிலத்தில் பொதுமுடக்க விதிகள் முடிவுக்கு வருவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.