மேலும் அறிய

ஈபிஎஸ் வைத்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு.. பேனர் செலவு எவ்வளவு என தமிழக அரசு விளக்கம்..

விளம்பர பேனருக்கான செலவில் ஊழல் நடைபெற்று இருப்பதாக எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, தமிழக அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவியை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று (புதன்கிழமை ) சந்தித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி அமைப்பில் முடிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் பணிகளை விளம்பரப்படுத்துவதற்கான, ரூ.350 மதிப்பிலான பேனருக்கு ரூ.7,906 அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பேனர் விளம்பரத்திற்கான ஒப்பந்தத்தை மாவட்ட வாரியாக, குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் அரசு வழங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் எடப்படி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு, தமிழக அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்பட்டு வரும் "நம்ம ஊரு சூப்பரு இயக்கம்" குறித்த விழிப்புணர்வு பதாகைகள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதாக உண்மைக்கு மாறான தகவல்கள் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் காணப்பட்டது.

இந்த தவறான தகவல் குறித்த விளக்கம் பின்வருமாறு: ஊரகப்பகுதிகளில் ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 2 வரை  "நம்ம ஊரு சூப்பரு இயக்கம்" என்ற சிறப்பு "மக்கள் இயக்கம்", அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டத்தின் போது துவங்கப்பட்டது. இந்த இயக்கமானது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை,  கழிவுநீர் மேலாண்மை மற்றும்  நெகிழி கழிவு மேலாண்மை ஆகியவற்றை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி கிராமப்புற மக்களிடையே, மனமாற்றத்தை ஏற்படுத்திட முதலமைச்சர் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்டது.

தூய்மைப்பணிகள் நிறைவேற்றம்:

ஒன்றிய அரசின் ”தூய்மையே சேவை” இயக்கத்தோடு இணைந்து  "நம்ம ஊரு சூப்பரு இயக்கம்" செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2ம் தேதி வரையில் அனைத்து ஊராட்சிகளிலும் நடத்தப்பட்டது. இதன் மூலம், குப்பைகள் அதிகம் தேங்கியிருந்த 47,399 இடங்கள் கண்டறியப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.21,775 பள்ளிகள், 22,695 அங்கன்வாடி மையங்கள், 45,824 அரசு கட்டடங்கள், 70,011 சமுதாய சுகாதார வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி 47,949 நீர்நிலைகள், 1,569 கி.மீ. அளவிலான கழிவுநீர் வடிகால்களும் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. அதோடு, 4.36 லட்சம் மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் செலவினங்கள்  ஒன்றிய நிதிக்குழு மானியம் அனுமதித்துள்ள வரையறுக்கப்பட்ட நிதியில் 2% நிர்வாக செலவின தொகுப்பிலிருந்தோ அல்லது பொது நிதியிலிருந்தோ  மேற்கொள்ள ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையால் அறிவுறுத்தப்பட்டது.

பேனருக்கான செலவு எவ்வளவு?:

விளம்பர பதாகைகள் நிறுவப்பட்டது தொடர்பாக மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின்படி, அச்சடிக்கும் பணியில் எந்தவொரு தனியொரு நிறுவனமும் ஈடுபடுத்தப்படவில்லை. மாநிலம் முழுவதும் உள்ள 89 நிறுவனங்கள்  மூலம் 27 மாவட்டங்களில் இந்த விளம்பர பதாகைகள் அச்சிடப்பட்டுள்ளன.  ஒன்பது மாவட்டங்களில் ஊராட்சிகள் வாயிலாக அப்பகுதியிலுள்ள அச்சகங்களின் மூலம் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் 84,653 எண்ணிக்கையிலான விளம்பரப் பதாகைகள் பல்வேறு அளவுகளில் அச்சடிக்கப்பட்டுள்ளன.  ஒரே ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பது உண்மைக்கு புறம்பான தகவல் ஆகும் இவற்றிற்கான சராசரி மதிப்பீடாக  பேனர் ஒன்றிற்கு, சரக்கு மற்றும் சேவை கட்டணத்துடன் சுமார் ரூ.611 செலவிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பதாகைகள் நிறுவிட, பேனர் ஒன்றுக்கு ரூ.7,906    செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருப்பது முற்றிலும் தவறானது என, தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
சூப்பர்ஸ்டார்னா சும்மாவா? ப்ரெஞ்சு படத்துலயே ரஜினிதான் மாஸ் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சூப்பர்ஸ்டார்னா சும்மாவா? ப்ரெஞ்சு படத்துலயே ரஜினிதான் மாஸ் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
Embed widget