CM Stalin : ஓலா நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்...3,111 பேருக்கு வேலைவாய்ப்பு...ரூ.2,500 கோடி முதலீடு.. முழு விவரம்..
ஓலா நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளதன் மூலம் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CM Stalin : ஓலா நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளதன் மூலம் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசிற்கும் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குமிடையே ரூ 7,614 கோடி முதலீட்டில் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காணொலி வாயிலாக வேலூர் மாவட்டத்தில் 4.98 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ 30 கோடி மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின். ஓசூர் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ 150 கோடி முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் அதிஉயர் தூய்மையான திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர். சென்னையில் ரூ.110 கோடி முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள GX குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் 20 கிகாவாட் மின்கலன்கள் உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகளை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 18, 2023
2/2
இதனை தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசிற்கும் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ரூ 7,614 கோடி முதலீட்டில் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் 20 கிகாவாட் மின்கலன்கள் உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகளை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
மேலும் படிக்க