மேலும் அறிய

தமிழ்நாட்டை தலைகீழாக மாற்றும் 5 சாலை திட்டங்கள்.. 52,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில்‌ அமையும் திட்டங்கள்

" தமிழ்நாட்டில் அமைய உள்ள மிக முக்கிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்து பார்க்க உள்ளோம் "

ஒரு நாடு வேகமாக வளர்ச்சி அடைவதற்கு போக்குவதற்கு மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. சாலைப் போக்குவரத்து வசதிகள், மேம்படுத்தப்படும்போது அந்த நாடு வேகமாக வளர்ச்சி அடையும். அந்த வகையில் இந்தியா முழுவதும், தொடர்ந்து சாலை வசதிகளை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ள தமிழ்நாட்டிலும், சாலை வசதிகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. 

தமிழ்நாடு - தேசிய நெடுஞ்சாலைகள் 

தமிழ்நாட்டில் சுமார் 6500க்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்கள் இணைக்கப்படுகின்றன . தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் சரக்கு மற்றும் பயணியர் போக்குவரத்து அதிகரித்து வருகின்றன. இதன்மூலம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க தொடங்குகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகளவு சரக்கு போக்குவரத்து நடைபெறுவது, பொருளாதார ரீதியில் மாநிலத்தை உயர்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 67 இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 ரூ.85 ஆயிரம் கோடி மதிப்பீட்டில்..

தொடர்ந்து தமிழ்நாட்டில் புதியதாக புறவழிச் சாலைகள், உயர்மட்ட மேம்பால சாலைகள், தரம் உயர்த்தப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் என சுமார் 25 திட்டங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் சுமார் 2170 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளன. பணிக்கு தோராயமாக 85 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 25 திட்டத்தில் பிரதானமான 5 திட்டத்தைப் பற்றி பார்க்க உள்ளோம். 

1. கிளாம்பாக்கம் - மகேந்திரா சிட்டி ஆறு வழி மேம்பாலச்சாலை 

சென்னையில் பிரதான பேருந்து நிலையமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் வருகாலங்களில் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கிளாம்பாக்கம் பகுதியில் இருந்து , செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திரா சிட்டி வரை ஆறு வழி மேம்பால சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆறு வழி மேம்பாலச் சாலை அமைய உள்ளது . இதற்கு 2950 கோடி ரூபாய் செலவு ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடுத்த கட்டப் பணிகள், அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2. சென்னை - திருச்சி ‌- மதுரை எட்டு வழி சாலை  

சென்னை-திருச்சி-மதுரை பசுமைவழிச் சாலை 8 வழிச்சாலையாக அமைக்கப்பட உள்ளது. சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து மதுரை வரை இந்த சாலை அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 470 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திட்ட மதிப்பீடு 26,500 கோடி ரூபாயாக கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

3. கரூர் - கோவை ஆறு வழிச்சாலை   

கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையே இரு வழி சாலை மட்டுமே இருக்கும் நிலையில் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனால் கரூர் - கோயம்புத்தூர் ஆறு வழிச்சாலை , ரிங் ரோடு இணைப்பு, சுமார் 182 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைய உள்ளது. இதற்காக சுமார் 7565 கோடி ரூபாய் செலவாகும் என திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

4. நாகப்பட்டினம் ராமநாதபுரம் நான்கு வழி சாலை

நாகப்பட்டினம் முதல் ராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 174 கிலோமீட்டர் தூரத்தில் அமைய உள்ள இந்த சாலை, 7090 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. இதேபோன்று ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை 134 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழி சாலை அமைய உள்ளது. இதற்காக 4915 கோடி ரூபாய் செலவாகும் என திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

5. ஸ்ரீபெரும்புதூர் - மதுரவாயல் ஆறு வழி மேம்பாலச் சாலை 

தொழிற்சாலை நிறைந்த பகுதியாக உள்ள ஸ்ரீபெரும்புதூரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதற்காக ஸ்ரீபெரும்புதூர் முதல் மதுரவாயில் வரை ஆறு வழி மேம்பாலச் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக சுமார் 3,780 கோடி ரூபாய் செலவாகும் என திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 23 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சாலை அமைய உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget