“நான் எல்லாருக்கும் பொதுவானவன்; என்ன எப்படி நினைக்கிறீங்களோ நான் அப்படிதான்” - உதயநிதி ஸ்டாலின்
தான் எல்லாருக்கும் பொதுவானவன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தான் எல்லாருக்கும் பொதுவானவன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின் "நான் படிச்சது டான் போஸ்கோ ஸ்கூல்ல. அதன் பிறகு மேல் படிப்பு படிச்சது லயோலா காலேஜ்ல. நானும் பெருமையா சொல்றேன். நானும் கிறிஸ்துவன் தான். உடனே பல சங்கிகளுக்கு வயிற்றெரிச்சலா இருக்கும். மீண்டும் சொல்றேன். அதை சொல்வதில் பெருமைபடுறேன்.
கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்பேரில், கோவை மாநகர் - வடக்கு - தெற்கு மாவட்டக் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கோவையில் இன்று பங்கேற்றோம்.
— Udhay (@Udhaystalin) December 18, 2024
‘2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் கழக அணி வெல்ல… pic.twitter.com/lc1gYVpC6w
நானும் கிறிஸ்துவன் தான். நீங்க என்ன கிறிஸ்தவனு நினைச்சா கிறிஸ்தவன், முஸ்லீம்னு நினைச்சா முஸ்லீம் , இந்துனு நினைச்சா இந்து; நான் எல்லாருக்கும் பொதுவானவன். எல்லா மதங்களுக்கும் அடிப்படையே அன்புதான். அதுதான் முக்கியம். அதைத்தான் எல்லா மதங்களும் போதிக்கிறது. எல்லோரும் அன்பு செலுத்த வேண்டும் என்றுதான் எல்லா மதங்களும் சொல்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.