Tamilnadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று: 27 பேர் உயிரிழப்பு!
சென்னையில் 173 பேரும், கோயம்புத்தூரில் 145 பேரும், செங்கல்பட்டில் 107 பேரும், ஈரோட்டில் 85 பேரும், தஞ்சாவூரில் 76 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
1,45,846மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,390 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 173 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 27 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
#TamilNadu | #COVID19 | 07 Oct
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 7, 2021
• TN - 1,390
• Total Cases - 26,74,233
• Today's Discharged - 1,487
• Today's Deaths - 27
• Today's Tests - 1,45,846
• Chennai - 173#TNCoronaUpdates #COVID19India
நேற்று கொரொனாவால் 1432 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்றைய பாதிப்பை விட இன்று சற்றுக்குறைந்துள்ளது. ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைவிட இன்று அதிகம்.
மதுரை மாவட்டத்தில், இன்று மட்டும் 23 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74794-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 32 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 73328 -ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1166 இருக்கிறது. இந்நிலையில் 300 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் விசாரித்தோம்.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று மட்டும் 10 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46142-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 15 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 45450-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 547-ஆக இருக்கிறது. இந்நிலையில் 145 நபர்கள் கொரோனா பாதிப்பால் விருதுநகரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் 173 பேரும், கோயம்புத்தூரில் 145 பேரும், செங்கல்பட்டில் 107 பேரும், ஈரோட்டில் 85 பேரும், தஞ்சாவூரில் 76 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
#TNCORONA Top 5 Districts For the Day ; 07 October 2021 #Chennai - 173#Coimbatore - 145#Chengalpattu - 107#Erode - 85#Thanjavur - 76#TNCoronaUpdates
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 7, 2021