TN Covid 19 UPdate: தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு 145 ஆக உயர்வு
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 145 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இன்றைய பாதிப்பு:
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 145 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 711 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 55 ஆயிரத்து 758 ஆக உள்ளது.
மாவட்டங்கள் நிலவரம்:
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 58 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 53 பேரும் கொரோனா தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் யாரும் கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
உயிரிழப்பு:
தமிழ்நாட்டில் இன்று யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 025 ஆக உள்ளது.
பரிசோதனை:
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 14 ஆயிரத்து 843 பேருக்கு கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் 6.5477909 கோடிக்கு மேல் கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் அறிய இங்கு பார்க்கவும்.
#TamilNadu | #COVID19 | 01 June 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) June 1, 2022
• TN - 139
• Total Cases - 34,55,613
• Today's Discharged - 52
• Today's Deaths - 0
• Today's Tests - 14,066
• Chennai - 59#TNCoronaUpdates #COVID19India
TNCorona District Wise Data 01 Jun 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) June 1, 2022
Ariyalur 0
Chengalpattu 58
Chennai 59
Coimbatore 6
Cuddalore 0
Dharmapuri 0
Dindigul 0
Erode 0
Kallakurichi 0
Kancheepuram 4
Kanyakumari 0
Karur 0
Krishnagiri 3
Madurai 1
Mayiladuthurai 0
Nagapattinam 0
Namakkal 0
Nilgiris 0
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்