மேலும் அறிய

கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை பாஜக புறக்கணிக்கிறது - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

கிராமப்புற பொருளாதாரத்தையே அழிவு நிலைக்கு கொண்டு செல்கிற முயற்சியில் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஈடுபட்டிருக்கிறது. - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பாஜக புறக்கணிக்கிறது..

கிராமப்புறங்களில் வறுமையை ஒழிக்க, வாழ்வாதாரத்தை உயர்த்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த 100 நாள் வேலை திட்டத்திற்கு படிப்படியாக நிதியை குறைத்து பா.ஜ.க. புறக்கணித்து வருகிறது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியது..

100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு கடந்த 2021-22 இல் ரூபாய் 98,467 கோடியாக இருந்தது, 2022- 23 இல் 90,810 கோடியாகவும், 2023-24 இல் ரூபாய் 70,000 கோடியாகவும், தற்போது 2024-25 இல் ரூபாய் 86,000 ஆயிரம் கோடியாக கடுமையாக நிதி குறைக்கப்பட்டிருக்கிறது.

உலகத்திலேயே மிகப்பெரிய வேலை வாய்ப்பு திட்டமாக கருதப்பட்ட இத்திட்டத்திற்கு மோடி அரசு மொத்த பட்ஜெட் தொகையான ரூபாய் 48 லட்சம் கோடியில் 1.78 சதவிகிதம் தான் நிதி ஒதுக்கியிருக்கிறது.

கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை பாஜக புறக்கணிக்கிறது - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

அதேபோல, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்கிற மலிவு விலை வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ஒரு வீட்டிற்கு கடந்த 2015 இல் ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் 5.07 லட்சம் தான் தொடர்ந்து ஒதுக்கப்படுகிறது. கட்டுமானப் பொருட்கள் கடந்த 8 ஆண்டுகளில் பல மடங்கு கூடியிருந்தாலும் அதற்கான நிதியை உயர்த்துவதற்கு ஒன்றிய அரசு தயாராக இல்லை.

இதில் ஒன்றிய அரசு ஒரு வீட்டிற்கு வழங்குகிற பங்கு ரூபாய் 1.5 லட்சம் தான். ஆனால், மாநில அரசு ரூபாய் 12 முதல் 14 லட்சம் வரை ஒரு வீட்டிற்கு கூடுதலாக செலவு செய்கிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கருத்து கூறியிருந்தார்.

இந்நிலையில் ஐந்தாண்டுகளில் 3 கோடி வீடுகள் கட்டப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஒன்றிய அரசு வீட்டின் மதிப்பீட்டையும், பங்கையும் உயர்த்தாமல் வீடுகளின் எண்ணிக்கையை உயர்த்த முடியுமா என்கிற கேள்விக்கு நிர்மலா சீதாராமன் என்ன பதில் கூறப்போகிறார்? என கேள்வி எழுப்பியுள்ளார். 

கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை பாஜக புறக்கணிக்கிறது - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

கிராமபுற வேலை வாய்ப்பு திட்டத்தை பாஜக புறக்கணிகிறது. 

மேலும், ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, உணவு மானியம் 4.04 சதவிகிதத்திலிருந்து 3.34 சதவிகிதமாகவும், உர மானியம் 3.4 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, பி.எம். கிசான் திட்டம் 1.8 சதவிகிதத்தில் இருந்து 1.2 சதவிகிதமாகவும், கல்வித்துறையில் 3.75 சதவிகிதத்தில் இருந்து 2.61 சதவிகிதமாகவும், சுகாதாரத்துறைக்கு 1.91 சதவிகிதத்திலிருந்து 1.85 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மக்கள் நலன் சார்ந்த முக்கிய துறைகளுக்கு நிதி குறைக்கப்பட்டதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக 100 நாள் வேலை திட்டம் 2015-16 இல் மொத்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 2.09 சதவிகிதமாக இருந்தது, இப்போது 1.78 சதவிகிதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.

மேலும், அனைத்திற்கும் மேலாக 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வாய்ப்பு தேவை அடிப்படையில் ரூபாய் 1.2 லட்சம் கோடி தேவைப்படுகிறது. ஆனால், தற்போது வழங்கப்பட்டுள்ள ரூபாய் 86,000 கோடியில் நடப்பு நிதியாண்டில் கடந்த நான்கு மாதங்களிலேயே ரூபாய் 41,500 கோடி செலவழிக்கப்பட்டு விட்டது. மீதி இருக்கிற ரூபாய் 44,500 கோடியை தான் எஞ்சியுள்ள 8 மாதங்களில் செலவழிக்க வேண்டும்.

ஏற்கனவே தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி ஒதுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை புறக்கணித்து சீரழிக்கிற வேலையை செய்து வருகிறது. இதன்மூலம் கிராமப்புற பொருளாதாரத்தையே அழிவு நிலைக்கு கொண்டு செல்கிற முயற்சியில் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஈடுபட்டிருக்கிறது. இவ்வாறு கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget