Amazon: 18 தளம் கொண்ட அமேசான் நிறுவனத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
பெருங்குடியில் அமைந்துள்ள அமேசான் நிறுவனத்தின் புதிய கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் சென்னையிலுள்ள பெருங்குடியில் 8.3 லட்சம் சதுரடி பரப்பளவில் புதிய கட்டடம் ஒன்றை கட்டி வந்தது. அந்தக் கட்டடத்தில் 18 தளங்கள் கொண்டுள்ளது. இந்தக் கட்டடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன் அமைச்சர் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் உடன் இருந்தார். அமேசான் நிறுவனத்தின் உலக வர்த்தக மையத்தின் 18 தளங்கள் கொண்டு மிகப்பெரிய கட்டடமாக அமைந்துள்ளது. இந்தப் புதிய கட்டடத்தின் மூலம் கிட்டதட்ட 6000 பேருக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
2005ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அமேசான் நிறுவனம் தன்னுடைய முதல் அலுவலகத்தை திறந்தது. இந்த அலுவலகத்தில் 50 பேர் அப்போது வேலை பார்த்தனர். தற்போது அங்கு 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். தமிழ்நாட்டில் அமேசான் நிறுவனத்தின் நான்காவது கட்டடம் இதுவாகும்.
மேலும் படிக்க:3 ஆண்டுகளில் 4 எஸ்.பிக்கள் மாற்றம்...! செங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பியாக சுகுணா சிங் பொறுப்பேற்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்