Tamizharasan Pachamuthu:காலை உணவுத்திட்டம்..”CM சார் செஞ்சது பெரிய விஷயம்” சிலாகித்து பேசிய லப்பர் பந்து இயக்குனர்!
கல்வியில் சிறந்த தமிழ் நாடு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லப்பர் பந்து திரைப்படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து காலை உணவு திட்டத்தின் பெருமை குறித்து பேசியுள்ளார்.

Tamizharasan Pachamuthu சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கல்வியில் சிறந்த தமிழ் நாடு என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட லப்பர் பந்து திரைப்படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து காலை உணவு திட்டத்தின் பெருமை குறித்து பேசியுள்ளார்.
கல்வியில் சிறந்த தமிழ் நாடு:
தமிழ் நாடு அரசின் ஏழு திட்டங்களின் சாதனைகளை விளக்கும் வகையில்,’கல்வியில் சிறந்த தமிழ்நாடு’என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் நடிகர்கள் சிவக்குமார், சிவகார்த்திகேயன், இயக்குனர்கள் மிஸ்கின், பிரேம்குமார் மற்றும் லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
காலை உணவுத்திட்டத்தின் பெருமை:
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பேசுகையில்,” இந்த நிகழ்ச்சியில் பல அறிவுஜீவிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் என்ன பேசுவது என்று எனக்கு தெரியவில்லை. இதற்கு முன்னர் பேசுய மாணவர்களை பார்த்ததும் எனக்கும் உற்சாகம் ஆகிவிட்டது. நானும் அரசு பள்ளியில் படித்தவன் தான். இலவச திட்டங்களை நிறைய நான் அனுபவித்து இருக்கிறேன். அதற்காக நன்றி சொல்லவேண்டும். இலவச பஸ் பாஸ் முதல் அரசின் நலத்திட்டங்கள் பலவற்றை நாங்கள் பெற்றிருக்கிறோம்.
அதன் மூலம படித்து பொறியியல் பட்டம் பெற்றவன நான். ஏழைக்குடும்பத்தில் பிறந்த எங்களுக்கு இட்லி கறி எல்லாம் தீபாவளி பொங்கலுக்கு மட்டும் தான். இதனால் ஏழ்மையை உணர்ந்தவன் என்பதால் காலை உணவுத்திட்டத்தின் அருமை எனக்கு தெரியும். காலை உணவுத்திட்டத்தை தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டுவந்ததற்கு மிக்க நன்றி. பெரிய பெரிய முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கும் அரசுகளுக்கு மத்தியில் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு நீங்கள் செய்திருப்பது மிகப்பெரிய சாதனை” என்று கூறியுள்ளார்.





















