TN Assembly Session LIVE:கூடுதலாக 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
TN Assembly Session LIVE Updates: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர். சட்டப்பேரவையில் நடக்கும் சம்பவங்கள் உடனுக்குடன் இங்கே..

Background
கடந்த மாதம் 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக்கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெறுகிறது. இந்தத் துறைகளுக்கான அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்து புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு - பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு - பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
கூடுதலாக 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
கூடுதலாக 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு





















