TN Assembly Session LIVE: 1,000 மரங்கள் அடங்கிய குறுங்காடுகள் உருவாக்கப்படும் : அமைச்சர் மெய்யநாதன்
TN Assembly Session LIVE Updates: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர். சட்டப்பேரவையில் நடக்கும் சம்பவங்கள் உடனுக்குடன் இங்கே..
LIVE

Background
சென்னையில் கடல் ஆமைகள் பாதுகாப்பு, மறுவாழ்வு மையம்
சென்னையில் கடல் ஆமைகள் பாதுகாப்பு, மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் அறிவித்துள்ளார்.
கிராமங்கள் தோறும் 'மரகத பூஞ்சோலைகள்' அமைக்கப்படும் : அமைச்சர் ராமசந்திரன் அறிவிப்பு
கிராமங்கள் தோறும் 'மரகத பூஞ்சோலைகள்' அமைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் அறிவித்துள்ளார்.
1,000 மரங்கள் அடங்கிய குறுங்காடுகள் உருவாக்கப்படும் : அமைச்சர் மெய்யநாதன்
நடப்பாண்டு சுற்றுச்சூழல்துறை சார்பில் 1,000 மரங்கள் அடங்கிய குறுங்காடுகள் உருவாக்கப்படும் என்றும், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, வேலூரில் விளையாட்டு மைதானங்களுக்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் குத்துச்சண்டை அகாடமி : அமைச்சர் மெய்யநாதன்
சென்னையில் ரூ. 2 கோடி செலவில் குத்துச்சண்டை அகாடமி அமைக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் சட்டப்பேரவையில் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேரலை!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேரலை!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

