மேலும் அறிய

TVK Vijay: கல்வி நிகழ்ச்சிகளில் கட்சி பாடல்.. ஆட்சிக்கு வந்தும் மாறாத தவெக.. குவியும் கண்டனம்!

தவெக ஆட்சி என்ற நிலையில் ஆங்காங்கே அக்கட்சி நிர்வாகிகள் முகம் சுளிக்க வைக்கும் செயல்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர். கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் அதுதொடர்பாக தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழக வெற்றிக் கழக அரசு தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில் கல்வி நிகழ்ச்சிகளில் கட்சிப் பாடல் ஒலிக்கப்பட்டது மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

தவெக ஆட்சியும் குற்றச்சாட்டுகளும்

2026 சட்டமன்ற தேர்தல் மூலம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றுள்ள ஒரு மாதத்தில் பல்வேறு விதமான பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடைபெற்றது. இதனிடையே ஆட்சி பொறுப்பேற்ற நாளில் விஜய் கட்சியின் நிர்வாகிகளுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டதால் ஒரு ஆட்டம் ஆடிப்பார்க்கலாம் என யாரும் நினைக்க வேண்டாம். அப்படி நினைப்பவர்கள் இப்பவே வெளியேறலாம் என கூறினார். 

ஆனால் தவெக ஆட்சி என்ற நிலையில் ஆங்காங்கே அக்கட்சி நிர்வாகிகள் முகம் சுளிக்க வைக்கும் செயல்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர். கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் அதுதொடர்பாக தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது. கட்சியின் நிர்வாகிகள் செயல்பாடு விஜய்க்கு தான் அவப்பெயரை ஏற்படுத்துகிறது என பொதுமக்களே கவலைப்படும் அளவுக்கு அவர்களின் செயல் அமைகிறது. 

கல்வி நிகழ்ச்சிகளில் கட்சிப்பாடல்

இதனிடையே கோவையில் uள்ள அரசு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்வில் அவர் பேசி முடித்த பிறகு தவெக கட்சி பாடல் ஒளிபரப்பப்பட்டதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்றார். அப்போது அவர் சுற்றியிருந்த மாணவ, மாணவியர்களை செல்ஃபி வீடியோ எடுத்தார். அந்த சமயம் கீழே அமர்ந்திருந்த மாணவ, மாணவிகள் தவெக தவெக என கத்தியது சலசலப்பை ஏற்படுத்தியது.

Also Read: மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே செயல்படும் அரசு பள்ளி வளாகத்தில் தவெக நிர்வாகி இடும்பாவனத்தைச் சேர்ந்த அகிலன் என்பவர் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் பெரும் கண்டனங்களைப் பெற்றது. தவெக மாவட்ட துணைச் செயலாளரான அவர் நள்ளிரவில் பள்ளி வளாகத்தில் உள்ள இடத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஈடுபட்டார். 

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே செயல்படும் அரசு பள்ளியின் வகுப்பறையில் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜயின் புகைப்படத்தை மாட்டி அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ரீல்ஸ் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளியில் அட்மிஷன் தொடங்கி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உறுப்பினராக சேர்ப்பது வரை பரிந்துரை கடிதம் அளிப்பது என தவெகவினர் மற்றக் கட்சியினரை போல செயல்படுவது மக்களிடையே ஆத்திரத்தை உண்டாக்கியுள்ளது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
Sabarivarman Murder : சபரிவர்மன் கொலையில் ட்விஸ்ட்.! நள்ளிரவில் சிறையில் நடந்தது என்ன.? CBCID விசாரணையில் ஷாக் தகவல்
சபரிவர்மன் கொலையில் ட்விஸ்ட்.! நள்ளிரவில் சிறையில் நடந்தது என்ன.? CBCID விசாரணையில் ஷாக் தகவல்
புன்னைநல்லூர் கோவில் பூச்சொரிதல் விழா: பெரியகோவிலில் இருந்து ரத ஊர்வலம்
புன்னைநல்லூர் கோவில் பூச்சொரிதல் விழா: பெரியகோவிலில் இருந்து ரத ஊர்வலம்
சிக்கன் பிரியர்களே மகிழ்ச்சி செய்தி... கோழி வணிகர்கள் கூட்டமைப்பு போராட்ட அறிவிப்புக்கு வெற்றி: கோழிக்கறி விற்பனை உண்டு
சிக்கன் பிரியர்களே மகிழ்ச்சி செய்தி... கோழி வணிகர்கள் கூட்டமைப்பு போராட்ட அறிவிப்புக்கு வெற்றி: கோழிக்கறி விற்பனை உண்டு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
TVS Raider 125: ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
Embed widget