மேலும் அறிய

TN Rain Alert: இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம்..

தமிழ்நாடில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழையும், 10 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  காரணமாக,  அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

31.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருச்சிராப்பள்ளி, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

01.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

02.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

03.09.2023 முதல் 06.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில்  மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில்  மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

திருப்புவனம் (சிவகங்கை) 14, RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்) 12, RSCL-2 நெமூர் (விழுப்புரம்) , RSCL-2 வளவனூர் (விழுப்புரம்) தலா 11, ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி) 10, RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி) தலா 9, சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), விழுப்புரம் தலா 7, ஆனைப்பாளையம் (கரூர்), வானமாதேவி (கடலூர்), பெலாந்துறை (கடலூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), புதுச்சேரி, சேலம், ஆரணி (திருவண்ணாமலை) தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

தமிழக கடலோரப்பகுதிகள்: 

03.09.2023 மற்றும் 04.09.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

01.09.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

02.09.2023: தெற்கு  இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய  தென்மேற்கு  வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளை ஒட்டிய  தென்மேற்கு  வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

03.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய  தென்மேற்கு  வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

04.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய  தென்மேற்கு  வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: எனக்கு பயமாக இருக்கிறது; நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: எனக்கு பயமாக இருக்கிறது; நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: எனக்கு பயமாக இருக்கிறது; நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: எனக்கு பயமாக இருக்கிறது; நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Embed widget