![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN Weather Update: மழையும் இருக்கு; அதுக்குமேல வெயிலும் இருக்கு.. இன்றைய வானிலை நிலவரம் என்ன?
தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும், வெப்பநிலை இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை அய்வு மையம் தெரிவித்துள்ளது.
![TN Weather Update: மழையும் இருக்கு; அதுக்குமேல வெயிலும் இருக்கு.. இன்றைய வானிலை நிலவரம் என்ன? Tamil Nadu will receive moderate rain for the next few days and the temperature will be 2-4 degrees Celsius above normal, the Meteorological Center said. TN Weather Update: மழையும் இருக்கு; அதுக்குமேல வெயிலும் இருக்கு.. இன்றைய வானிலை நிலவரம் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/20/fc7a60d6b7832ad8280ae86451b432051681974920307589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,
20.04.2023 மற்றும் 21.04.2023: தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.
22.04.2023 முதல் 24.04.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை :
20.04.2023 மற்றும் 21.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மிதமான மழை இருக்கும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்னும் கத்திரி வெயில் தொடங்காத நிலையில் ஈரோடு, கரூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் ஈரோட்டில் 40.6 டிகிரி செல்சியஸ், வேலூரில் – 39.9 டிகிரி செல்சியஸ், திருச்சி – 39.5 டிகிரி செல்சியஸ், நாமக்கல் – 39.5 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூர் – 39.0 டிகிரி செல்சியஸ், மதுரை – 39.8 டிகிரி செல்சியஸ், சேலம் – 39. 4 டிகிரி செல்சியஸ், கோவை – 38.7 டிகிரி செல்சியஸ், தர்மபுரி – 38.2 டிகிரி செல்சியஸ், திருத்தணி – 38.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் – 38.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 2.8 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். சென்னை நுங்கம்பாக்கத்தில் – 36.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 1.3 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 25.6 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 2.7 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். தொடர்ந்து தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இருப்பினும் வெப்ப அலைக்கான அறிவிப்பு எதுவும் இல்லை என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
CM Stalin: முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சிலை: செம அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் - வரவேற்ற பாஜக!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)