மேலும் அறிய

Vinfast: தூத்துக்குடி மின்வாகன உற்பத்தி ஆலை, ஆண்டுக்கு சுமார் 1,50,000 கார்களை உற்பத்தி செய்யும்- அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

கார்பன் வெளியேற்றம் இல்லாத  பூஜ்ஜிய உமிழ்வு போக்குவரத்தை எல்லோராலும் எளிதில் பெறக்கூடிய  ஒன்றாக மாற்றுவதில் தமிழ்நாடு உறுதிபூண்டுள்ளது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் சிப்காப்ட் பூங்காவில் ரூ.16,000 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள வின்ஃபாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இது குறித்து பேசிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேசியதாவது,

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் இந்த மாபெரும் தொடக்கம்,  தமிழ்நாட்டின் முற்போக்கான தொழில்துறை கொள்கைகளை மீண்டும் உறுதிப்பட எடுத்துரைக்கிறது.

மேலும் உலகளாவிய வாகன புதுமைக் கண்டுபிடிப்புச் சூழலுக்கும், உற்பத்திக்கும் தமிழ்நாட்டை மிகச்சிறந்த உற்பத்தி மையம் என  மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் பங்கு அமைந்திருக்கிறது.

பூஜ்ஜிய உமிழ்வு போக்குவரத்து: 

நாட்டில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் விரும்பும் லட்சிய வளர்ச்சித் திட்டங்களுக்கு ஏற்ற இடமாக தமிழ்நாடு இருக்கும். மேலும் கார்பன் வெளியேற்றம் இல்லாத  பூஜ்ஜிய உமிழ்வு போக்குவரத்தை எல்லோராலும் எளிதில் பெறக்கூடிய  ஒன்றாக மாற்றுவதில் தமிழ்நாடு உறுதிபூண்டுள்ளது.

 இந்த திட்டம் தமிழ்நாட்டு மக்களின் பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டிற்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் இந்த தொடக்கம், அதன் உலகளாவிய விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். உலகின் மூன்றாவது மிகப்பெரிய வாகன சந்தையான இந்தியாவில், மிக துரிதமாக வளர்ச்சிக்கண்டு வரும் மின்சார வாகனப் போக்குவரத்து பிரிவில் வேகமான வளர்ச்சியை எட்டுவதை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Vinfast: தூத்துக்குடி மின்வாகன உற்பத்தி ஆலை, ஆண்டுக்கு சுமார் 1,50,000 கார்களை உற்பத்தி செய்யும்- அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

வேலைவாய்ப்பு: 

தூத்துக்குடியில் அமையும் இந்த ஒருங்கிணைந்த மின்சார வாகன உற்பத்தி ஆலை, ஆண்டுக்கு சுமார் 150,000 கார்களை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது பெரும் பங்களிப்பதோடு. 3,000 முதல் 3,500 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் இது வழங்கும். இந்நிறுவனம் ஆரம்பத்தில் இருந்தே உள்ளூர்மயமாக்கலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் உலக அளவில் சிறந்த விநியோகத் தளத்துடன் இணைந்து செயல்படும்.

தமிழ்நாட்டில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் முதலீடு, வியட்நாமிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான விரிவான உத்திசார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்நிறுவனத்தின் உலகளாவிய எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கிறது, இந்தியாவை, தனது சர்வதேச சந்தை விரிவாக்கத்திற்கு ஒரு உந்துசக்தியாக இந்த நிறுவனம் பயன்படுத்துகிறது.

 வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் விழா, உள்நாட்டிலும் உலக அளவிலும் விரைவான முறையில் பசுமை போக்குவரத்து மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.

அதி நவீன உற்பத்தி ஆலையை கட்டமைப்பதோடு மட்டுமில்லாமல், ஒரு சந்தையில் வலுவான பிராண்ட் செயல்பாட்டை உருவாக்கவும், நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களை விரைவாகச் சென்றடையவும், நாடு தழுவிய  விற்பனையாளர் (டீலர்ஷிப்) கட்டமைப்பை நிறுவ வின்ஃபாஸ்ட் திட்டமிட்டுள்ளது.

வின்ஃபாஸ்ட் இந்திய சந்தையில் ப்ரீமியம் தரத்திலான தயாரிப்புகள், எல்லோரலும் வாங்குவதற்கு ஏற்ற போட்டித் தன்மையுடன் கூடிய விலையில் விற்பனை, விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் ஆகியவற்றை வழங்க உறுதிபூண்டுள்ளது. இது மின்சார வாகனப் போக்குவரத்தை பரவலாக சென்றடையும் தன்மை கொண்டதாக மாற்றும். 

மேலும் மின்சார வாகனம் என்றால் நாட்டில் மக்களுக்கு விருப்பமான மின்சார வாகன பிராண்டாக இது உருவெடுக்கும் உதவும்  எனவும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அண்ணா பல்கலை. தற்காலிக பேராசிரியர்கள் கூண்டோடு பணிநீக்கம்! விளக்கம் சொல்ல விரும்பாத பதிவாளர்!
அண்ணா பல்கலை. தற்காலிக பேராசிரியர்கள் கூண்டோடு பணிநீக்கம்! விளக்கம் சொல்ல விரும்பாத பதிவாளர்!
TNPSC Group 2: குளறுபடிக்கு உள்ளான குரூப் 2, 2ஏ தேர்வு; மறுதேர்வு தேதி அறிவித்த டிஎன்பிஎஸ்சி!- எப்போது?
TNPSC Group 2: குளறுபடிக்கு உள்ளான குரூப் 2, 2ஏ தேர்வு; மறுதேர்வு தேதி அறிவித்த டிஎன்பிஎஸ்சி!- எப்போது?
தமிழ்நாட்டிற்கு எப்போது தேர்தல்? - எந்த தேதியில் நடக்கும்? பாஜக தலைவர் சொன்ன முக்கிய தகவல்
தமிழ்நாட்டிற்கு எப்போது தேர்தல்? - எந்த தேதியில் நடக்கும்? பாஜக தலைவர் சொன்ன முக்கிய தகவல்
'அன்புமணிக்கே பா.ம.க சொந்தம்’ உறுதி செய்தது தேர்தல் ஆணையம்..!
'அன்புமணிக்கே பா.ம.க சொந்தம்’ உறுதி செய்தது தேர்தல் ஆணையம்..!
ABP Premium

வீடியோ

EV Velu Inspection |’’ஸ்டாலின் ஐயா வர்றாருஎல்லாம் கரெக்டா இருக்கணும்’’எ.வ.வேலு திடீர் INSPECTION
Police Attack North Indians | ’’டேய்..போடா ***பொழைக்க வந்த நாய் நீ’’ வடமாநிலத்தவரை தாக்கிய போலீஸ்
Pakistan Demand to ICC |
DMDK Premalatha | பேச்சாடா பேசுனீங்க.. காத்தடிக்கும் தேமுதிக Office, விருப்ப மனு பரிதாபங்கள்
Vijay Constituency | லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! 2 இடங்களில் விஜய் போட்டி? தயக்கத்தில் தவெக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணா பல்கலை. தற்காலிக பேராசிரியர்கள் கூண்டோடு பணிநீக்கம்! விளக்கம் சொல்ல விரும்பாத பதிவாளர்!
அண்ணா பல்கலை. தற்காலிக பேராசிரியர்கள் கூண்டோடு பணிநீக்கம்! விளக்கம் சொல்ல விரும்பாத பதிவாளர்!
TNPSC Group 2: குளறுபடிக்கு உள்ளான குரூப் 2, 2ஏ தேர்வு; மறுதேர்வு தேதி அறிவித்த டிஎன்பிஎஸ்சி!- எப்போது?
TNPSC Group 2: குளறுபடிக்கு உள்ளான குரூப் 2, 2ஏ தேர்வு; மறுதேர்வு தேதி அறிவித்த டிஎன்பிஎஸ்சி!- எப்போது?
தமிழ்நாட்டிற்கு எப்போது தேர்தல்? - எந்த தேதியில் நடக்கும்? பாஜக தலைவர் சொன்ன முக்கிய தகவல்
தமிழ்நாட்டிற்கு எப்போது தேர்தல்? - எந்த தேதியில் நடக்கும்? பாஜக தலைவர் சொன்ன முக்கிய தகவல்
'அன்புமணிக்கே பா.ம.க சொந்தம்’ உறுதி செய்தது தேர்தல் ஆணையம்..!
'அன்புமணிக்கே பா.ம.க சொந்தம்’ உறுதி செய்தது தேர்தல் ஆணையம்..!
ISRO on Chandrayaan 4: சந்திரயான்-4; நிலவில் இடத்தை குறித்த இஸ்ரோ; லேண்டரின் பயணம் எப்போது.? வெளியான முக்கிய தகவல்
சந்திரயான்-4; நிலவில் இடத்தை குறித்த இஸ்ரோ; லேண்டரின் பயணம் எப்போது.? வெளியான முக்கிய தகவல்
US Threat Khamenei Escape: அச்சுறுத்தும் அமெரிக்கா; அலெர்ட்டான ஈரான் உச்ச தலைவர்; 37 வருட பாரம்பரியத்தை கைவிட்ட காமேனி
அச்சுறுத்தும் அமெரிக்கா; அலெர்ட்டான ஈரான் உச்ச தலைவர்; 37 வருட பாரம்பரியத்தை கைவிட்ட காமேனி
Affordable Mileage Bikes: 60 - 80 கிமீ மைலேஜ்; மலிவு விலை; உங்களுக்கான பெஸ்ட் பைக் எதுன்னு வாங்குறதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்கோங்க
60 - 80 கிமீ மைலேஜ்; மலிவு விலை; உங்களுக்கான பெஸ்ட் பைக் எதுன்னு வாங்குறதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்கோங்க
Tata Sierra vs Renault Duster: டாடா சியாராவோ, ரெனால்ட் டஸ்டரோ வாங்குற Plan இருக்கா.? அப்போ எது சிறந்ததுன்னு தெரிஞ்சுக்கணும்ல.!
டாடா சியாராவோ, ரெனால்ட் டஸ்டரோ வாங்குற Plan இருக்கா.? அப்போ எது சிறந்ததுன்னு தெரிஞ்சுக்கணும்ல.!
Embed widget