காவலர் தேர்விலும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் : சீருடை பணியாளர்கள் தேர்வாணையம்
காவலர் பணிக்கான எழுத்துத்தேர்விலும் தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் என தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
காவலர் பணிக்கான எழுத்துத்தேர்விலும் தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் என தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 % மதிப்பெண் எடுத்தால் மட்டுமே காவல் பணிக்கான எழுத்து தேர்வு கணக்கில் கொள்ளப்படும் என்றும், இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே காவலராக முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கையில்,
1.விண்ணப்பதாரர் 10ஆம் வகுப்பு/எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் 10ஆம் வகுப்பில் தமிழ் மொழியை மொழிப் பாடமாகப் படித்திருக்க வேண்டும். இல்லையெனில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தமிழ் மொழி இரண்டாம் நிலைத் தேர்வில், பணியில் சேர்ந்த நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க : IPL 2022 : ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்துமா தமிழகம்..? ஏலத்தில் 30 வீரர்கள்.. முன்னிலையில் ஷாருக் !
அதேபோல், 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2. அனைத்து பதவிகளுக்கும் வயது வரம்புகள்:
விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் மற்றும் அறிவிக்கை ஆண்டின் ஜூலை 1 ஆம் தேதியின்படி 26 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. குறிப்பிட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் உச்ச வயது வரம்பு தளர்வு பின்வருமாறு :
அதிகபட்ச வயது வரம்பு :
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 28 ஆண்டுகள் வரை வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட பட்டியல் சாதியினர், பட்டியல் சாதியினர் (அருந்ததியர்). பட்டியல் பழங்குடி வகுப்பினருக்கு 31 ஆண்டுகள் வரை வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,திருநங்கைகளுக்கு 31 ஆண்டுகள் வரையிலும், ஆதரவற்ற விதவைகளுக்கு 37 ஆண்டுகள் வரையிலும் வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் படைவீரர்கள்/மத்திய துணை ராணுவப் படையின் முன்னாள் பணியாளர்களுக்கு 47 ஆண்டுகள் வரையிலும் வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.
Watch video : மது பாட்டிலோடு பார் பெண்களுடன் டான்ஸ் ஆடிய முதியவர்.. கைது செய்த காவல்துறை.. ஏன்?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்