மேலும் அறிய

TN Sunday Lockdown Rules: ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் எதெற்கெல்லாம் அனுமதி...? எதெற்கெல்லாம் தடை...? முழு விபரம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ள நிலையில்,அன்றைய தினம் எதெற்கெல்லாம் அனுமதி, எதெற்கெல்லாம் தடை உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் 9-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். 

ஆனால் அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும். 

போக்குவரத்து  

பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது. 

உணவகங்கள் 

உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செய்லபட அனுமதிக்கப்படும்.  இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை விமானம், இரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும் போது, பயணச்சீட்டு வைத்து கொள்ள வேண்டும்.

மற்ற நாட்களில் இதர கட்டுப்பாடுகள்

மழலையர் காப்பகங்கள் தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரிப் பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை.

அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.

பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால  நலன் மற்றும் தடுப்பூசி  செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.

அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.

போக்குவரத்து 

பொது பேருந்துகள் மற்றும் புறநகர் இரயில்களில் உள்ள இருக்கைகளில், 50% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

மெட்ரோ இரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

பயிற்சி நிலையங்கள் - கட்டுப்பாடு 

பயிற்சி நிலையங்கள் (Training and Coaching Centres) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.
பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. 

அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது.

அனைத்து பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Parks / Amusement Parks) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதிக்கப்படும்.
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.

சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.

மீன் மற்றும் காய்கறிச் சந்தைகளில் குறிப்பாக வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீன் மற்றும் காய்கறி சந்தைகள் அமைக்க சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களிலிருந்து செல்லும் பேருந்துகளை மண்டலம் வாரியாக பிரித்து வெவ்வேறு இடங்களிலிருந்து பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்துத் துறை மற்றும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அனைத்து சேவைத் துறைகள் போன்ற பொது மக்கள் செல்லும் இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள், உரிமையாளர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்.  

அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் 9.1.2022-க்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி, அதற்குண்டான சான்றினை தொடர்புடைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இரவு நேரப் பணிக்குச் செல்லும்போது தங்கள் அலுவலக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான சான்றிதழையும் வைத்துக்கொள்ளவேண்டும்.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள் ஊரடங்கு கட்டுப்பாட்டிற்குட்பட்டு அனுமதிக்கப்படும்.

உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.
திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.

இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும். துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்யுமாறு உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கேளிக்கை விடுதிகளில் (Clubs) உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.


உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.


அனைத்து திரையரங்குகளிலும் (Multiplex/ Cinemas/Theatres) அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.


திறந்த வெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.  


உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பயிற்சியும், 50% பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்.


அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும்.


அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Salons and Spas) போன்றவை ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.


ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
"பருத்தினா நாங்கதான்.." காட்டன் ஆடை ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
"பருத்தினா நாங்கதான்.." காட்டன் ஆடை ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு!
EPS ADMK: மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
Top 10 News Headlines: திமுக பரப்புரை, அதிமுக பொதுக்குழு, தவெக கூட்டம், எகிறிய வெள்ளி - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திமுக பரப்புரை, அதிமுக பொதுக்குழு, தவெக கூட்டம், எகிறிய வெள்ளி - 11 மணி வரை இன்று
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Embed widget