(Source: ECI/ABP News/ABP Majha)
Rain Alert: வெளுத்து விடப்போகும் மழை சீசன்.. இன்றைய வானிலை நிலவரம் இதுதான்!
சென்னையில் அடுத்த 24 மணிநேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
20.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21.09.2022 முதல் 23.09.2022 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
24.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை:
Weather forecast for next 7 days-Chennai pic.twitter.com/MTHfZg5pE2
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 20, 2022
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35.36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
கூடலூர் பஜார் (நீலகிரி) 4, வில்லிவாக்கம் (திருவள்ளூர்) 3, சென்னை(என்) (சென்னை), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), சின்னகளார் (கோவை). சோழவரம் (திருவள்ளூர்), மேல் கூடலூர் (நீலகிரி) தலா 2, புழல் (திருவள்ளூர்), கிளென்மோர்கன் (நீலகிரி), திருவள்ளூர் (திருவள்ளூர்), பெரம்பூர் (சென்னை), நடுவட்டம் (நீலகிரி), சாந்தியூர் கேவிகே (சேலம்), ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி), யூட் பிரையர் எஸ்டேட் (டிஸ்ட் நீலகிரி) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 20, 2022
20.09.2022 முதல் 22.09,2022 வரை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழககடலோரப் பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
20.09.2022: வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.