மேலும் அறிய

TN Rains Breaking LIVE: மழை வெள்ளம் நிலவரம்- 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

TN Rains Breaking LIVE: தமிழ்நாட்டில் இன்று தீவிர கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை தொடர்பான உடனடி தகவல்களை கீழே காணலாம்.

LIVE

Key Events
TN Rains Breaking LIVE: மழை வெள்ளம் நிலவரம்- 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

Background

 TN Rains Breaking LIVE Update:

தமிழ்நாட்டில்  இன்று ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்கவே இன்று தீவிர கனமழை பெய்யும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

12 மாவட்டங்களில் மழை

கேரளாவில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. அதே வேளை தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் கொட்டித் தீர்க்கும் மழை

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த ஓரிரு தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. நேற்று (ஆக.03) அமாநிலம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்க்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கேரளாவுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. குறிப்பாக, கேரளாவின் கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாக்குளம் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

அதேபோல், தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதிகளிலும், தமிழ்நாட்டின் சில மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் மழையால் இன்று (ஆக.04) தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மற்றும் சிறுமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.

அதேபோல் கனமழை காரணமாக வால்பாறை வட்டாரப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கடுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வால்பாறையில், தொடர்ந்து 3ஆவது நாளாக விடுமுறை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

திருவாரூர் மாவட்டத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் காயத்ரி அறிவித்துள்ளார். தேனி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் கனமழை எதிரொலியாக ஒகேனக்கல், மேட்டூர் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. அதேபோல், குற்றால அருவிகளில் குளிக்க 4ஆவது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் கேரள மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று கேரள மாநில அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் இளைஞர்கள் செல்பி எடுக்கும் மோகத்தை கைவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

12:49 PM (IST)  •  04 Aug 2022

TN Rains Breaking LIVE: தென் பெண்ணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

தென் பெண்ணை ஆற்றின் கொள்ளவு நிரம்பியதால், அணையில் இருந்து 2,800 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

12:44 PM (IST)  •  04 Aug 2022

TN Rains Breaking LIVE: தமிழ்நாட்டில் அணைகள் 100 சதவீதம் நிரம்பியது- விவரம்!

தேர்வாய் கண்டிகை (திருவள்ளூர்), வீராணம் (கடலூர்), ஆண்டியப்பன் (திருவண்ணாமலை), மோர்தனா (வேலூர்), குண்டாறு (தென்காசி). சேத்துப்பாறை (தேனி), சோலையாறு (கோவை), வர்தமாநதி (திண்டுக்கல்), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), மேட்டூர் (சேலம்) உள்ளிட்ட அணைகளில் தண்ணீர் கொள்ளவு 100 சதவீதம் நிரம்பியுள்ளன.

12:40 PM (IST)  •  04 Aug 2022

TN Rains Breaking LIVE: தமிழ்நாட்டில் 10 அணைகள் முழு கொள்ளவை எட்டின!

தமிழ்நாட்டில் தொடர் கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான அணைகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன.

12:37 PM (IST)  •  04 Aug 2022

TN Rains Breaking LIVE:மேட்டூர் அணைக்கு 2.30 இலட்சம் கன அடி நீர் வர வாய்ப்பு!

மேட்டூர் அணைக்கு 2.10 இலட்சம் முதல் 2.30 இலட்சம் கன அடி வரை வரை காவிரிநீர் வர வய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுத்தப்பட்டுள்ளனர்.

12:34 PM (IST)  •  04 Aug 2022

TN Rains Breaking LIVE: பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 2 இலட்சம் கன அடியாக உயர்வு!

காவிரியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 2 இலட்சம் கன அடியாக உயர்வு.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget