Orange alert: வெளுத்துவாங்கப்போகும் கனமழை: தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எதிரொலி காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆரஞ்சு அலர்ட்-மிக கன மழை
கனமழை எதிரொலி காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள 4 மாவட்டங்களுக்கு, இன்று ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 9, 2022
இன்று கன மழை பெறும் மாவட்டங்கள்:
கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், மதுரை, திருச்சி, , அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர்,வேலூர்,புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 22 மாவட்டங்களில் இன்று அக்டோபர் 9ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை கன மழை பெறும் மாவட்டங்கள்:
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 26 மாவட்டங்களில் நாளை அக்டோபர் 10ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 9, 2022
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34.35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 9, 2022
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு , சென்னை pic.twitter.com/VdPU6AB7f1
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 9, 2022
09/10/2022 காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ( °C) மற்றும் இயல்பிலிருந்து அதன் விலகல் (°C) pic.twitter.com/jQiskaQqTt
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 9, 2022