Tamil Nadu NH Projects: தமிழ்நாட்டில் இனி பறக்கலாம்.. 963 கிமீ தூரத்திற்கு புதிய நான்கு வழிச் சாலைகள், மொத்தம் 6,805 கிமீ
New National Highway Projects in Tamilnadu: தமிழ்நாட்டில் புதியதாக 963 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

New National Highway Projects in Tamilnadu: தமிழ்நாட்டில் புதிய திட்டங்களின் பணிகள் முடிவடையும்போது, மாநிலத்தில் நான்கு வழிச்சாலையின் மொத்த நீளம் 2,735 கிலோ மீட்டராக உயரும்.
963 கிமீ தூரம் நான்கு வழிச்சாலை
சாலை வசதி என்பது நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு பொருளின் விலை எவ்வளவு என்பது தொடங்கி, ஒரு தொழிற்சலையை எங்கு அமைக்கலாம் என்பது வரை, சாலை வசதிகள் தான் தீர்மானிக்கிறது. இதன்காரணமாகவே மத்திய அரசோ அல்லது மாநில அரசோ, உட்கட்டமைப்பு பிரிவில் சாலை வசதியை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 963 கிலோ மீட்டர் தூரத்திற்கு, நான்கு வழிச்சாலை வசதியை ஏற்படுத்தும் பணியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான மொத்த செலவு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது.
விரிவடையும் நெடுஞ்சாலை நெட்வர்க்:
புதிய திட்டங்களின் முடிவில் தமிழ்நாட்டில் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2,735 கிலோ மீட்டரிலிருந்து 3,698 கிலோ மீட்டராக விரிவடையும். மாநிலத்தில் உள்ள மொத்த தேசிய நெடுஞ்சாலைகளின் தூரம் 6,805 கிலோ மீட்டர் ஆகும். இதில் 1,282 கிலோ மீட்டர் இருவழிச் சாலைகள், நடைபாதை பிரிவுகளுடன் கூடிய 2,383 கிலோ மீட்டர் நீளமுள்ள இருவழிச் சாலைகள், 384 கிலோ மீட்டர் ஆறுவழிச் சாலைகள் மற்றும் 21 கிலோ மிட்டர் எட்டு வழிச் சாலைகள் அடங்கும். சாலை வசதி மேம்படும் அதேநேரத்தில் மாநிலத்தில் தற்போதுள்ள சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, 90 ஆக உயரும் என கூறப்படுகிறது.
துரித கதியில் பணிகள்:
தற்போது நடைபெற்று வரும் 963 கிலோ மீட்டர் தூரத்திற்கான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான பணிகள் மும்முரமாக இருப்பதாகவும், அதில் 767 கிலோ மீட்டர் தூர சாலைகள் அடுத்த 12-15 மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டங்களில் பெரும்பாலானவை ஏற்கனவே 60-70% நிறைவடைந்துள்ளன.
புதிய நான்கு வழி சாலை திட்டங்கள்:
திண்டுக்கல்-பொள்ளாச்சி (131.9 கி.மீ) நீளமுள்ள நான்கு வழிச்சாலைப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டதாக தெரிகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விக்கிரவாண்டி-சேத்தியாத்தோப்பு-சோழபுரம்-தஞ்சாவூர் (164 கி.மீ) திட்டம், ஒரு வருடத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 65 கி.மீ. நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையின் நான்கு வழிச்சாலை பகுதியளவு நிறைவடைந்துள்ளது. சுற்றுச்சூழல் கவலைகள் காரணமாக தாமதமாகி வந்த மாமல்லபுரம்-முகையூர்-மரக்காணம்-புதுச்சேரி ஈ.சி.ஆர் (106 கி.மீ) பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த ஒராண்டுக்குள் இவை பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற சாலை திட்டங்கள்:
இது தவிர மாமல்லபுரம்-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை (106 கிமீ), திண்டுக்கல்-பொள்ளாச்சி (131.9 கிமீ), நாகப்பட்டினம்-தஞ்சாவூர் (65 கிமீ), விழுப்புரம்-நாகப்பட்டினம் (125 கிமீ), விக்கிரவாண்டி-தஞ்சாவூர் (163 கிமீ), குடிபாலா - ஸ்ரீபெரும்புதூர் (பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை) (106 கி.மீ.) போன்ற திட்டப்பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், திண்டுக்கல்-தேனி-குமுளி (135 கி.மீ.) மற்றும் நெரலூர்-தொரப்பள்ளி அக்ரஹாரம்-ஜிட்டண்டஹள்ளி (60 கி.மீ.) சாலை பணிகள் 20-30% நிறைவடைந்துள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

