Tamil News Today: தமிழ்நாட்டில் 1,600க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
LIVE
Background
கல்வியால் தகுதி வரட்டும்; தகுதி பெற்றால் மட்டுமே கல்வி எனும் அநீதி நீட் ஒழியட்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். நீட் தேர்வில் முறைகேடு, கேள்வித்தாள், லீக், ஆள்மாறாட்டம் உள்ளிட் பல்வேறு மோசடிகளும், மாணவ மாணவிகள் தற்கொலைகளும் ஒன்றிய அரசின் மனதை மாற்றவில்லை என்பது கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தே தீர வேண்டும் என்ற அவசியத்தை மேலும், மேலும் வலுவடைய வைக்கிறது.
இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுள்ளது. இதனை இந்திய துணைக்கண்டத்தில் பிரச்னையாக கருதி அனைத்து மாநில முதல்வர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆதரவு திரட்டி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தமிழ்நாட்டில் 1,600க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,608இல் இருந்து 1,580 ஆக குறைந்துள்ளது. ஒருநாள் தொற்று பாதிப்பு நான்கு நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இரண்டாவது நாளாக குறைந்துள்ளது. சென்னையில் மேலும் 185 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 22 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,190 ஆக உயர்ந்துள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு - இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், “தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது. 28 மாவட்டங்களில் நிரப்பப்படாத 789 இடங்களுக்கு அக்டோபர் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். முதற்கட்ட வாக்குப்பதிவு அக்டோபார் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்கலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம்” என்றார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 23 நாட்கள் நடைபெற்ற பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மகளிர் இட ஒதுக்கீடு 40%ஆக அதிகரிக்கப்படும் - தமிழக அரசு
அரசுப் பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 40%ஆக அதிகரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட வாய்ப்பு
9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட வாய்ப்பு