TN Rain Alert: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்? மழை நிலவரம் இதோ..
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி மாவட்டம்) 11, ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி மாவட்டம்) 9, பெருங்களூர் (புதுக்கோட்டை மாவட்டம்) 8, ஆவடி (திருவள்ளூர் மாவட்டம்) 7, அன்னவாசல் (புதுக்கோட்டை மாவட்டம்) 6, தருமபுரி மாவட்டம், புதுக்கோட்டை தலா 5, நாட்றம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை மாவட்டம்), குப்பநத்தம் (கடலூர் மாவட்டம்), ஆதனக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்), நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்), சென்னை நுங்கம்பாக்கம், விருத்தாசலம் கேவிகே (கடலூர் மாவட்டம்), கிருஷ்ணகிரி, வி.களத்தூர் (பெரம்பலூர் மாவட்டம்) தலா 4, ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம் மாவட்டம்), பெரம்பூர் (சென்னை மாவட்டம்), லக்கூர் (கடலூர் மாவட்டம்), டிஜிபி அலுவலகம் (சென்னை மாவட்டம்), குன்னூர் (நீலகிரி மாவட்டம்), சென்னை கலெக்டர் அலுவலக கட்டிடம், வொர்த் எஸ்டேட் செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்), காட்பாடி (வேலூர் மாவட்டம்), அம்பத்தூர் (திருவள்ளூர் மாவட்டம்), காட்டுமயிலூர் (கடலூர் மாவட்டம்), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்), தொண்டையார்பேட்டை (சென்னை மாவட்டம்), ஒகேனக்கல் (தருமபுரி மாவட்டம்), ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்), ஜெயம்கொண்டம் (அரியலூர் மாவட்டம்), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி மாவட்டம்), மணமேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம்), ஏற்காடு (சேலம் மாவட்டம்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி மாவட்டம்), ஆற்காடு (இராணிப்பேட்டை மாவட்டம்), வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம்), கெட்டி (நீலகிரி மாவட்டம்), திருப்பத்தூர், வடபுதுப்பட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) , வில்லிவாக்கம் ஏஆர்ஜி (திருவள்ளூர் மாவட்டம்) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தென் இந்திய பகுதிகளின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளர்து.
23.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24.06.2023 முதல் 26.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
நேற்று தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 39.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. பாளையங்கோட்டையில் 38.4 டிகிரி செல்சியஸ், வேலூரில் 33.9 டிகிரி செல்சியஸ், சென்னை நுங்கம்பாக்கத்தில் 35.7 டிகிரி செல்சியஸ், மீனம்பாக்கத்தில் 35.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.