Breaking Live: தலிபான்கள் காற்றில் சுட்டதில் 17 ஆஃப்கான் மக்கள் பலி
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
LIVE
Background
Latest News in Tamil Today LIVE Updates:
கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியாவை விட்டு வெளியேற முடியாமல் இருக்கும் வெளிநாட்டவரின் விசா மற்றும் தங்கும் காலம் 2021 செப்டம்பர் 30 வரை செல்லும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
தலிபான்கள் காற்றில் சுட்டதில் 17 ஆஃப்கான் மக்கள் பலி
புதிய அரசு அமையவிருப்பதைக் கொண்டாடும் விதமாக ஆஃப்கானிஸ்தானில் தலிபான்கள் காற்றை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 17 ஆஃப்கான் பொதுமக்கள் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறன.
EMERGENCY NGO's Kabul hospital says it "admitted 3 patients, treated 7 outpatients, and received 2 people dead on arrival" after 9pm Friday. All had bullet wounds, say staff. A presumed cause is citywide shooting in the air on Friday evening. pic.twitter.com/zzBv3nfy9b
— TOLOnews (@TOLOnews) September 4, 2021
Breaking News Tamilnadu: மாநிலங்களவை எம்பியானார் திமுகவின் அப்துல்லா
மாநிலங்களவை எம்பியாக திமுகவின் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மாநிலங்களவை எம்பி பதவிக்கு அதிமுக சார்பில் யாரும் அறிவிக்கப்படாத நிலையில் போட்டியின்றி தேர்வானார்.
Breaking News LIVE: தமிழ்நாட்டில் பள்ளிக்குச் சென்ற மூன்று மாணவர்களுக்கு கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் பள்ளிக்குச் சென்ற மூன்று மாணவர்களுக்கும், ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Covid 19 Active Cases in India: சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,99,778 ஆக உள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் 34,791 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,20,63,616 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,99,778 ஆகும்.
COVID-19 Vaccine Availability in States/UTs: 4.36 கோடி தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் கைவசம் உள்ளன
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு செப்டம்பர் 3-ந் தேதி வரை, 65 கோடிக்கும் அதிகமான (65,00,99,080) கொரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது.
இந்திய அரசு மற்றும் நேரடி மாநில கொள்முதல் வகை மூலம் மேலும், 1.20 கோடிக்கும் அதிகமான அளவு (1,20,95,700) தடுப்பூசிகள் உள்ளன. சுமார் 4.36 கோடி (4,36,81,760) கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன.