Ex-minister Thangamani Raid Live Updates: தங்கமணி வீட்டில் சோதனை - ரூ.2.16 கோடி பறிமுதல்
DVAC Raids Thangamani LIVE Updates: முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 68 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
LIVE
Background
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரில் சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2013 முதல் 2018 வரை தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்ததன் மூலம் மின்சாரத்துறையில் 26ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த குற்றச்சாட்டை மறுத்த தங்கமணி(thangamani), மின்சார வாரியம் என்பது சேவைத்துறை. அது வருமானம் ஈட்டித்தரும் துறை கிடையாது. மக்களுக்கு தடையில்லாத மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசின் நிதி உதவி பெற்று மின் கட்டணத்தை உயர்த்தாமல் தடையில்லாத மின்சாரத்தை வழங்கினோம் என்று தெரிவித்தார்.
தங்கமணி வீட்டில் சோதனை - ரூ.2.16 கோடி பறிமுதல்
முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் ரூ.2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது.
தங்கமணி மருமகனின் அரிசி ஆலையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே களியனூரில் உள்ள ஆலையில் சோதனை நடைபெற்று வருகிறது. தங்கமணி மருமகன் தினேஷ்குமார் சமபதிக்கு சொந்தமான இந்த அரிசி ஆலையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தடுப்பு பேரிகார்டை அகற்ற வேண்டுமென அதிமுக தொண்டர்கள் போலிசாருடன் கடும் வாக்குவாதம்
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டு முன்பு குவிந்த அதிமுக தொண்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்புக்காக போடப்பட்ட தடுப்பு பேரிகடுகளை அகற்ற வேண்டும் எனவும் தடுப்பிற்க்கு போடப்பட்ட பேரிகார்டில் நிற்க முடியாது எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை
அரும்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினருக்கு சொந்தமான ஸ்ரீ ப்லைவுட்ஸ் மற்றும் ஜெய ஸ்ரீ பில்ட் ப்ரோ நிறுவனங்களில் இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்..
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷின் உறவினர் ஆனந்த வடிவேல் என்பவரது இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை
குறிப்பாக அரும்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினருக்கு சொந்தமான ஸ்ரீ ப்லைவுட்ஸ் மற்றும் ஜெய ஸ்ரீ பில்ட் ப்ரோ நிறுவனங்களில் இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்..
சென்னை ஷெனாய் நகர் செல்லாம்மாள் தெருவில் வசித்து வரும்
காங்கேயம் பில்டர்ஸ் இன்ஜினியரிங் கல்லூரியின் இயக்குனர் வெங்கடாசலம்
வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்..
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷின் உறவினர் ஆனந்த வடிவேல் என்பவரது இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.