TN Headlines: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்தது என்ன? முக்கிய செய்திகளின் ரவுண்டப் இதோ...!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
- TN Rain Alert: இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.. அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் மழை.. இன்றைய வானிலை நிலவரம்..
30.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 01.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க
- Ponmudi Case: சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு..
2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு கன்னியப்பன் இந்த வழக்கைத் விசாரித்து வந்தார். இந்த வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் படிக்க
- Rameswaram: ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.. மணிக்கு 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்..
வட கடலோர கர்நாடகா மற்றும் அண்டை பகுதிகளில் சூறாவளி சுழற்சியின் காரணமாக, தெற்கு கொங்கன்-கோவா கடற்கரை ஒட்டி கிழக்கு மத்திய அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தொடர்புடைய சூறாவளி சுழற்சி சராசரி கடல் மட்டத்திலிருந்து 5.8 கிமீ வரை உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
- ’கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காவிரி பிரச்சினையும் வந்து விடுகிறது' - வானதி சீனிவாசன்
பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்த காவிரி நதி நீர் பிரச்னை எழவில்லை. காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு வழங்கிய வேண்டிய காவிரி நீரை, பாஜக அரசு வழங்கி வந்தது. அனைத்து மாநிலங்களையும் சமமாக நினைக்கும், தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்ட கட்சி பாஜக என்பதால் இது சாத்தியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- புரட்டாசி 2வது சனிக்கிழமை: கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்
புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு மிக உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் ஆலயங்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடனான முடி காணிக்கையும், பாத காணிக்கையும் செய்தும், அன்னதானம் வழங்கியும் தங்களுடைய நேர்த்திக்கடனை செய்து வருகின்றனர். மேலும் படிக்க