TN Headlines Today: தமிழ்நாட்டில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. சுட்டெரிக்கும் சூரியன்....முக்கிய நிகழ்வுகளின் ரவுண்டப்!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
- IAS Officers Transfer: தமிழ்நாட்டில் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. யாருக்கு என்ன பொறுப்பு..?
தமிழ்நாட்டில் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அதில் மதுரை மற்றும் சேலம் மாநகராட்சிக்கு புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வெளியான அறிவிப்பில், மதுரை மாநகராட்சி ஆணையராக கே.ஜே. பிரவின் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இதற்கு முன்னர் ராமநாதபுரம் மாவட்ட துணை ஆட்சியராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது மதுரை மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/transfer-of-7-ias-officers-in-tamilnadu-121624
- சென்னையில் 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்...! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
நெம்மேலியில் அமைந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வரும் 8ஆம் தேதி காலை 10 மணி முதல் 9-ஆம் தேதி காலை 6 மணி வரை மண்டலம் 13,14 மற்றும் 15க்குட்பட்ட பகுதிகளில் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்வது நிறுத்தப்படும் என்று சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/chennai/drinking-water-supply-will-stop-for-2-days-more-than-15-areas-in-chennai-june-8th-and-9th-121618
- TN Weather Update: கூடுதலாக 4 டிகிரி செல்சியஸ் வரை... தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் சூரியன்! - வானிலை நிலவரம்!
தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பை விட 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும், ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஒரு புறம் வெயில் இருந்தாலும் ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/according-to-the-meteorological-department-the-temperature-in-tamil-nadu-will-be-2-4-degree-celsius-above-normal-and-heat-wave-will-prevail-in-a-few-places-121613
- CM MK Stalin: கவனமாக பேசுங்கள்! அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்கள், திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
பொதுக்கூட்டங்கள், அரசு நிகழ்ச்சிகள், விழாக்களில் பேசும் தி.மு.க.-வினர் கவனமுடன் வார்த்தைகளை நிதானித்து பேச வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் விவாதித்த பின்னர், கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர்கள் மூலமாக இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது. மக்களிடம் நமது திட்டங்களையும் சாதனைகளையும் கொண்டு சேர்க்கும் வண்ணம் பேச வேண்டும் என்றும் தேவையில்லாமல் பேசி மக்களின் அதிருப்தியை சம்பாரித்துவிட வேண்டாம் என்று அவர் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-chief-minister-mk-stalin-advice-dmk-party-people-to-talk-carefully-while-addressing-public-121559
- High Court Madurai : அரிக்கொம்பன் யானையை கேரளாவில் விடக்கோரிய வழக்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அளித்த தீர்ப்பு....
அரிக்கொம்பன் யானையை அது நன்கு அறிந்த கேரளாவின் மதிக்கெட்டான் சோலை தேசிய பூங்கா, சின்னக்கானல் பகுதிக்கு செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/arikomban-elephant-case-high-court-madurai-branch-order-121586