TN Headlines Today: பி.டி.ஆர் விளக்கம்.. முதலமைச்சர் டெல்லி பயணம்.. தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ..!
TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளை கீழே காணலாம்.
- சர்ச்சைக்குரிய ஆடியோ விவகாரம் - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் மருமகன் சபரீசன் குறித்து தான் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் வைரலான நிலையில், அதுகுறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். அதில் ஆடியோவில் சொல்லப்பட்டது போல் நான் யாரிடமும் நேரில் அல்லது போனில் பேசவில்லை. திமுக அரசின் சாதனைகளை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியாததால் இது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர். யாரை பற்றியும் தவறாக தாம் எதுவும் பேசவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி விசிட்...! திடீர் பயணத்தின் பின்னணி என்ன?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு விமானத்தில் டெல்லி செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கும் அவர், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, 3 நாள் பயணமாக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படித்தியுள்ளது. மேலும் படிக்க
- சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் ”ஆபரேஷன் காவேரி” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
சூடானில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான ஆபரேஷன் காவேரி மீட்பு பணிக்கு அனைத்து வகையிலும் தழிழக அரசு ஒத்துழைப்பு வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எழுதப்பட்டுள்ள கடிதத்தில், இந்திய குடிமக்கள் சூடானில் இருந்து விரைவாக வெளியேறுவதற்கு வசதியாக இந்திய விமானப்படை விமானம் மற்றும் இந்திய கடற்படை கப்பல்கள் சூடான் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது ஆறுதல் அளிப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
-
ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்திற்கு எதிர்ப்பு..! நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த விளையாட்டு நிறுவனங்கள்..!
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் தமிழ்நாட்டில் நாள்தோறும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் 2வது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
-
சூடிபிடிக்கும் கோடநாடு வழக்கு.. விசாரணை வளையத்திற்குள் வரும் சசிகலா..! முதலமைச்சர் அதிரடி உத்தரவு..!
ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் காவலாளியை கொலை செய்துவிட்டு கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. தீவிரப்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் கோடநாடு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் எழுந்த நிலையில், இந்த வழக்கை தீவிரப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க