மேலும் அறிய

TN Headlines Today: நீட் தேர்வு, விடியல் பயணம்... தமிழ்நாட்டில் இதுவரை நடந்தது என்ன? முக்கிய செய்திகளின் ரவுண்டப் இதோ!

TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

  • CM Stalin on NEET: இதைச் செய்தால் நீட்டை ஒழித்துவிட முடியும்- சுதந்திர தின உரையில் முதலமைச்சர்

நாட்டின் 77வது சுதந்திரதினத்தில் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், ”மக்கள் நேரடியாக தொடர்பில் உள்ள கல்வி உள்ளிட்டவை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் எனவும், கல்வி மாநிலப்பட்டியலுக்கு வந்தால் நீட் போன்ற கொடூரமான தேர்வுகள் முற்றிலுமாக அகற்றப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.  தேசிய கொடி வெறும் கொடி மட்டுமல்ல கோடான கோடி மக்களின் மணி முடி, சுதந்திர இந்தியாவுக்கு போராடிய தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தவேண்டும், அவர்களை பெற்றெடுத்த குடும்பங்கள் இருக்கும் திசைநோக்கி வணங்குவோம் என முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க 

  • EPS Slams Dmk:அரசு மருத்துவமனைக்கு போனால் கை, கால் போகிறது..சுகாதார அமைச்சருக்கு இதுதான் வேலையா? - ஈபிஎஸ் கண்டனம்

திமுக தலைமையிலான மாநில அரசு தமிழ்நாட்டின் மருத்துவத் துறையை தொடர்ந்து சீரழித்து வருவதாக,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ”கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் வசிக்கும் தனிஷ்- ஷைனி தம்பதியினர் தங்களது 3 வயது ஆண் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சில நாட்களுக்கு முன்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாகவும், அங்கு குழந்தையின் நோய் தன்மையைப் பரிசோதனை செய்யாமல், வெறி நாய் கடிக்கான மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் படிக்க 

  • Vidiyal Payanam: மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்திற்கு ‘விடியல் பயணம்’ என பெயர் மாற்றப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாட்டின் 77வது சுதந்திரதினத்தில் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்திற்கு இனி  ’விடியல் பயணம்’  என பெயர் சூட்டப்படுகிறது என அறிவித்தார். மகளிர் வாழ்க்கையில் அவர்கள் பெறப்போகும் அனைத்து விடியலுக்கான தொடக்க பயணமாக இந்த திட்டமாக தொடரும். மேலும் படிக்க 

  • TN Rain Alert: அடுத்த 6 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதா? இன்றைய வானிலை நிலவரம் இதோ..

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 21 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 15.08.2023 மற்றும் 16.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 17.08.2023 முதல் 21.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் படிக்க 

  • Independence Day CM Stalin: சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்திற்கான ஓய்வூதியம் ரூ.11,000 ஆக அதிகரிப்பு - முதலமைச்சர் ஸ்டாலினின் சுதந்திர தின உரை

நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். காவல்துறயை சேர்ந்தவர்களின் இசைவாத்தியங்கள் முழங்க, 119 அடி உயரமுள்ள கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், பின்பு மரியாதையும் செலுத்தினார். தொடர்ந்து, நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அப்போது மூவர்ண கொடியின் நிறத்திலான பலூன்கள் அங்கு பறக்கவிடப்பட்டன. மேலும் படிக்க 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget