மேலும் அறிய

TN Rain Alert: 27 ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்! அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி:

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

24.11.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

25.11.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

26.11.2023 முதல் 30.11.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான /  மிதமான மழை    பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

குன்னூர் (நீலகிரி) 9, சூரங்குடி (தூத்துக்குடி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) தலா  8, பர்லியார் (நீலகிரி), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி)  தலா 7, ஆதார் எஸ்டேட் (நீலகிரி), தேவாலா (நீலகிரி), கோடநாடு (நீலகிரி), பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), கோத்தகிரி (நீலகிரி), குன்னூர் PTO (நீலகிரி) தலா 5, கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), குந்தா பாலம் (நீலகிரி) தலா  4, சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), கிளன்மார்கன் (நீலகிரி), சின்னக்கல்லார்  (கோயம்புத்தூர்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), கின்னக்கோரை (நீலகிரி), திருமூர்த்தி அணை (திருப்பூர்), திருமூர்த்தி IB (திருப்பூர்), சோத்துப்பாறை (தேனி), பென்னாகரம் (தர்மபுரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), விராலிமலை (புதுக்கோட்டை) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

வங்க கடல் பகுதிகள்:

27.11.2023: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

28.11.2023: தென்கிழக்கு  வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். 
ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 28-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
Embed widget