TN Rain Alert: அடுத்த 5 நாட்கள்.. தமிழ்நாட்டில் வெளுக்கப்போகுது மழை.. சென்னையில் எப்படி இருக்கும் வானிலை?
வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23.05.2023 முதல் 27.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
சிற்றாறு (கன்னியாகுமரி) 9, வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 8, சிவலோகம் (கன்னியாகுமரி), மேல் கூடலூர் (நீலகிரி) தலா 6, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), துறையூர் (திருச்சி) தலா 5, ஆயிக்குடி (தென்காசி), கூடலூர் பஜார் (நீலகிரி), லக்கூர் (கடலூர்), ஓசூர் (கிருஷ்ணகிரி), நாலுமுக்கு (திருநெல்வேலி), சிறுகுடி (திருச்சி), மங்களபுரம் (நாமக்கல்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), புலிப்பட்டி (மதுரை), வேடசந்தூர் (திண்டுக்கல்) தலா 4, அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), தொழுதூர் (கடலூர்), கருப்பாநதி அணை (தென்காசி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), திருச்சி டவுன் (திருச்சி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), பஞ்சப்பட்டி (கரூர்) தலா 3, சின்கோனா (கோயம்புத்தூர்), சோலையாறு (கோயம்புத்தூர்), கள்ளந்திரி (மதுரை), எடப்பாடி (சேலம்), சங்கரிதுர்கம் (சேலம்), ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), திற்பரப்பு (கன்னியாகுமரி), க்ளென்மார்கன் (நீலகிரி), பார்வூட் (நீலகிரி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), அரண்மனைப்புதூர் (தேனி) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
25.05.2023 முதல் 27.05.2023 வரை: மன்னார் வளைகுடா மற்றும் தமிழக - ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
26.05.2023 மற்றும் 27.05.2023: இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.