மேலும் அறிய
Advertisement
IAS Officers Transfer: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இட மாற்றம்; கரூர், தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு புது கலெக்டர்கள்!
IAS Officers Transfer: தமிழ்நாட்டில் 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
தமிழ்நாட்டில் 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி, கரூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் புதிய ஆட்சியர்களை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் சிப்காட் நிர்வாக இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநராக மாற்றம்.
- கரூர் ஆட்சியர் பிரபுசங்கர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- செங்கல்பட்டு துணை ஆட்சியர் லட்சுமிபதி, தூத்துக்குடி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- நகர்ப்புற வளர்ச்சி மேலாண்மை வாரிய இணை நிர்வாக இயக்குநர் தங்கவேல், கரூர் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சுந்தரவள்ளி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் ஆணையராக இருந்த வீரராகவா, தொழிற்கல்வி துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியர் ஸ்ருதஞ்சய் நாராயணன், விழுப்புரம் மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சியின் திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- வேலூர் மாநாகராட்சி ஆணையர் ரத்தினசாமி, ராம்நாதபுரம் மாவட்ட கிராமபுற மேம்பாட்டு ஏஜென்சியின் திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது துறை வாரியாக அதிரடி மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக என்று சொல்லும் அளவிற்கு பல அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டனர். முன்னதாக ஐபிஎஸ் அதிகாரிகள் 16 பேர் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது
மேலும் வாசிக்க..
IPS Transfer: 16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion