கரூர்: தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது பெற்றவர்களுக்கு காசோலை, சான்றிதழ்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
தங்கள் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.
தமிழ்நாடு அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது மற்றும் காசோலைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் சார்பில் தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம், ரெங்க பாலீமார்ஸ் நிறுவனம், மற்றும் சிறந்த திடக்கழிவு மேலாண்மைக்காக குளித்தலை நகராட்சிக்கும் தலா ரூ.1 இலட்சம் காசோலை மற்றும் சான்றினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.
தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தங்கள் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும். இவ்விருதினை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தலைமை அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்ட குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின் சார்பில் பொது மேலாளர் ரவி, ஜெயகுமார் அவர்களுக்கும், ரெங்க பாலீமார்ஸ் நிறுவனம் சார்பில் சங்கர் அவர்களுக்கும், மற்றும் சிறந்த திடக்கழிவு மேலாண்மைக்காக குளித்தலை நகராட்சி சார்பில் ஆணையாளர் மனோகரன் ஆகியோர்களுக்கு தலா ரூ.1 இலட்சம் காசோலை மற்றும் சான்றினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட மாசுக்கட்டுபாட்டு வாரியம் அலுவலர் ஜெயலெட்சுமி, தனித்துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.