மேலும் அறிய

RN Ravi Speech: | முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு.. அடுக்கப்பட்ட நலத்திட்டங்கள் - கவனிக்க வைத்த ஆளுநர் உரை!

2022-ஆம் ஆண்டு தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் இன்று  தொடங்கியது.  

ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை, கொரோனா பரவல் கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் இந்த கூட்டத்தொடர் மீண்டும் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. நடப்பாண்டிற்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் தமிழ்த்தாயுடன் தொடங்கியது.

கூட்டம் தொடங்கியவுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் உரையை படிக்கத் தொடங்கினார். 

RN Ravi Speech: | முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு.. அடுக்கப்பட்ட நலத்திட்டங்கள் - கவனிக்க வைத்த ஆளுநர் உரை!

தன்னுடைய உரையை தொடங்கிய ஆளுநர் தமிழக அரசை பாராட்டியும், நலத்திட்டங்களை பட்டிலிட்டும் பேசினார். அதில், '' கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளக்குகிறது.  கொரோனா இரண்டாவது அலையை சிறப்பாக கட்டுப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள்.  இயற்கையுடன் இணைந்து வாழும் தமிழகர்களின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில், மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. 'எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் திட்டம்' மூலம் தமிழை எல்லா இடங்களிலும் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்

மேகதாதுவில் கர்நாடகா அணை  கட்ட ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது என்பதே இந்த அரசின் நிலைப்பாடு. ’இல்லம் தேடி கல்வித் திட்டம்’ மூலம் தரமான கல்வியை எல்லா குழந்தைகளுக்கும் தர தமிழக அரசு முனைந்திருக்கிறது. தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையையே தமிழ்நாடு அரசு பின்பற்றும். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தொடர்வதில் அரசு உறுதியுடன் உள்ளது. தந்தை பெரியார், கலைஞர் கருணாநிதியின் கனவை நனவாக்கும் விதமாக அனைத்து சாதியினரையும் தமிழ்நாடு அரசு அர்ச்சகர்கள் ஆக்கியுள்ளது என குறிப்பிட்டார். 

கூட்டம் தொடங்கியவுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் உரையை படிக்கத் தொடங்கினார். அப்போது, மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்வதற்காக தி.மு.க. தலைமையிலான அரசு நிறைவேற்றிய நீட் தேர்வு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாதை கண்டித்து அ.தி.மு.க., வி.சி.க. எம்.எல்.ஏ.க்கள் தொடரில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வன், திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி, நாகை  எம்.எல்.ஏ. ஆளுர் ஷாநவாஸ், செய்யூர் எம்.எல்.ஏ. பனையூர் பாபு ஆகியோர் நீட் விவகாரத்தில் ஆளுநர் முறையாக நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

வி.சி.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த சிறிது நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டத்தை நிறைவு செய்தது, கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக பொறுப்பு வகித்தவர்களின் வீடுகளில் தொடர்ந்து ரெய்டு உள்ளிட்ட தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு; ஆதாரமும் இருக்கு - அடித்து சொல்லும் ஐஐடி காமகோடி 
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு; ஆதாரமும் இருக்கு - அடித்து சொல்லும் ஐஐடி காமகோடி 
இந்த தண்டனை போதாது; மாநில அரசு நினைப்பது வேறு: பெண் மருத்துவர் கொலை வழக்கில் பொங்கிய மம்தா!
இந்த தண்டனை போதாது; மாநில அரசு நினைப்பது வேறு: பெண் மருத்துவர் கொலை வழக்கில் பொங்கிய மம்தா!
UGC draft: சர்ச்சையைக் கிளப்பிய யுஜிசி வரைவறிக்கை: சாட்டையைச் சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்!
UGC draft: சர்ச்சையைக் கிளப்பிய யுஜிசி வரைவறிக்கை: சாட்டையைச் சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்!
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!
Embed widget