மேலும் அறிய

தமிழக ஆளுநர் ரவியின் அதிர்ச்சி பேச்சு: பள்ளிகளில் சாதி பாகுபாடு! 75 வருடங்களில் என்ன நடந்தது?

ஆரோவில்: வகுப்புவாதிகளால் இன்றைக்கும் பாகுபாடு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் வகுப்பறைகளில் கூட சாதி பாகுபாடு இருக்கிறது - ஆளுநர் ரவி

விழுப்புரம்: தமிழகத்தில் வகுப்புவாதிகளால் சாதி பாகுபாடு ஏற்படுத்தப்படுகிறது, பள்ளி வகுப்புகளில் கூட பாகுபாடு பார்க்கப்படுவதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்தார்.

பள்ளி வகுப்புகளில் கூட பாகுபாடு - ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை

தமிழகத்தில் வகுப்புவாதிகளால் சாதி பாகுபாடு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளி வகுப்புகளில் கூட பாகுபாடு பார்க்கப்படுவதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் சர்வதேச நகரமான ஆரோவில்லில் உள்ள ஆரோவில் அறக்கட்டளை சார்பில், ‘இந்திய குடியரசின் சாதனைகள், சவால்கள் மற்றும் வருங்கால திட்டங்கள்’ எனும் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் நேற்று நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், ஆரோவில் அறக்கட்டளையின் செயலர் ஜெயந்தி ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: பாரதத்தின் நோக்கம் என்னவோ, அதுவே ஆரோவில் நோக்கமாகும். 75 வருட குடியரசு நாட்டில் நமக்கு கிடைத்தது என்ன? கிடைக்காதது என்ன? என்பதை யோசிக்க வேண்டும். 2014ம் ஆண்டுக்கு முன்பும், பின்பும் என நமது நாட்டின் வளர்ச்சியைப் பிரிக்கலாம். நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார நீதி, அரசியல் நீதி கிடைக்க வேண்டும்.

பள்ளிகளில் வகுப்பறைகளில் கூட சாதி பாகுபாடு

நாள் தோறும் செய்திதாள்கள் படிக்கும் போது, தமிழகத்தில் பட்டியலின மக்கள் படும் துயரங்களை பார்க்க முடிகிறது. அவர்களுக்கு தனி வழி, தனி பாதை என்பது நமது மாநிலத்தில் இருக்கிறது. வகுப்புவாதிகளால் இன்றைக்கும் பாகுபாடு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் வகுப்பறைகளில் கூட சாதி பாகுபாடு இருக்கிறது.

உலகளவில் பொருளாதாரத்தில் 6வது வளர்ந்த நாடாக இருக்கிறோம். 2014ம் ஆண்டுக்கு முன்பு 30 சதவீத மக்கள் நமது நாட்டில் ஏழை மக்களாக இருந்தனர். 75 ஆண்டுகளாக 3 தலைமுறைகளாக பெரிய பொருளாதார பிரச்சினைகளை சந்தித்து வந்தனர். மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு ஏழைகளின் எண்ணிக்கை 26 சதவீதமாக குறைந்துள்ளது.

முன்பு ஒரு இன மக்களுக்கும், மற்றொரு இன மக்களுக்கும் இடையே மோதல் நிலவியது. நாட்டின் 200 மாவட்டங்களில் மாவோயிஸ்ட் பிரச்சினை இருந்தது. காஷ்மீரில் இந்து மக்கள் துரத்தி அடிக்கப்பட்டனர். 2014-ம் ஆண்டுக்கு பிறகு நிலை மாறியது. வடகிழக்கு மாநிலங்களிலும் அமைதி ஏற்பட்டுள்ளது. இந்தியா மீது அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என்ற பாகிஸ்தான், தற்போது அடங்கி கிடக்கிறது. ஆனாலும், நம் நாட்டில் தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுக்கப்படுகிறது.

ஆயிரம் ஆண்டுகளாக பிரித்தாளும் சூழ்ச்சி நடைபெறுகிறது. ஆயிரம் மதங்கள் இருந்தாலும், ஒரே தர்மம் மட்டுமே உள்ளது. அது சனாதன தர்மம். ‘பாரதத்தில் வாழும் அனைவருக்கும் ஆன்மிக ஆற்றல் உள்ளது’ என அரவிந்தர் கூறினார். ஆயிரம் ஆண்டுகள், அந்நியர்கள் நம்மை ஆட்சி செய்தாலும், பாரதத்தை அதன் தன்மைமாறாமல் சனாதனம்தான் காப்பாற்றியது.

தமிழகம் ஆழ்வார்கள், நாயன்மார்களின் பூமி. பாரதத்தில் ஒரே குடும்பமாக நினைத்து வாழ வேண்டும். பிரதமர் மோடி, திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்து வருகிறார். தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்தை நிறுவினார். ராஜேந்திர சோழனை இந்திய அரசு பெருமைப்படுத்தியுள்ளது. இவ்வாறு ஆளுநர் ஆர்என் ரவி பேசினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
Maruti Suzuki: இயர் எண்ட் ஆஃபர்.. ஸ்விஃப்ட் தொடங்கி எர்டிகா வரை - பட்ஜெட் கார்களுக்கே தள்ளுபடிகளை வீசிய மாருதி
Maruti Suzuki: இயர் எண்ட் ஆஃபர்.. ஸ்விஃப்ட் தொடங்கி எர்டிகா வரை - பட்ஜெட் கார்களுக்கே தள்ளுபடிகளை வீசிய மாருதி
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Embed widget